சமையல்னா சாதாரண விஷயமா?
சமையலை விடவும் அதி உன்னதமான ஒரு கலை உலகில் இருப்பதாக தெரியவில்லை.மனிதன் உயிர்வாழ அத்தியாவசிய தேவைகளில் முதலிட்த்தில் இருப்பது உணவு.மனிதன் உணவால் உருவாக்கப்பட்டவன் தான்.பாரம்பர்யத்தை விட்டுவிலகி விதம்விதமான சமையல் பழக்கத்துக்கு வந்துவிட்டாலும் இன்று ரசித்து ருசித்து சாப்பிடுபவர்கள் குறைந்து போய் விட்டார்கள் என்று தோன்றுகிறது.
எனக்கு தெரிந்தவர் ஒருவர் கடை வைத்திருக்கிறார்.தினமும் வீட்டுக்கு செல்லும் முன்பு மெஸ்ஸில் சாப்பிட்டு விடுவார்.வீட்டுக்குப்போய் கொஞ்சம் போதும் தொப்பை பெரிதாகிக் கொண்டே வருகிறது என்பார்.கிட்ட்த்தட்ட தினமும் இதுவேதான்.ஒரு நாள் கேட்டுவிட்டேன்.’’அம்மா போனப்புறம் இப்படித்தான் சார்,அவங்க(மனைவி) சமைக்கறது எனக்கு பிடிக்கிறதில்ல!”
சமையல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வித்தியாசமான ஒன்று.சில குடும்பங்களில் காரம் குறைவாக சாப்பிடுவார்கள்,சில இட்த்தில் நமக்கு நாக்கு சுட்டுவிடும்.உப்பும் அப்படித்தான்.சில வீடுகளில் சப்பென்று இருக்கும்.உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் சாப்பிட நேரும்போது உப்பு குறைவாக இருந்தால் சேர்த்துக்கொள்வதும்,அதிகமாக இருந்தால் தண்ணீர் விட்டுக்கொள்வதும் எனக்கு வழக்கம்.
அடிக்கடி நோய்வாய்ப்படும் குடும்பங்களில் சமையலும் ஒரு பிரச்சனையாக இருக்க வாய்ப்புண்டு.ஆரோக்கியத்தை தரும் உணவு வகைகள் சேர்ப்பது குறைவாக இருக்கும்.சில குறிப்பிட்ட உணவு வகைகளுக்கு பழகிப் போய்விடுவதும் காரணம்.சிலருக்கு கொழுப்பு நிறைந்தவை,சிலருக்கு காரம் நிறைந்தவை.
ஒவ்வொரு பகுதிக்கும் உணவு வகைகளில் மாற்றம் இருப்பது தெரிந்த்தே! வட நாட்டிலிருந்து வரும் லாரிக்கார்ர்கள் எங்காவது சாலையோரங்களில் நிறுத்திவிட்டு அவர்களே சமைத்துக்கொள்வார்கள்.ஆந்திராவில் பச்சை மிளகாய் கடிப்பதை பார்த்தால் நமக்கு கண்ணில் நீர் வரும்.
என் தாத்தாவுக்கு ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் அரை ஆழாக்கு நெய் வேண்டும் என்று பாட்டி சொன்னதுண்டு.இப்போது அப்படி சாப்பிட்டால் கதை வேறு.அவர்கள் நாள் முழுக்க உடல் உழைப்பில் வாழ்ந்தவர்கள்.சமையலில் இருக்கும் பெரும்பாலான சேர்க்கைகளும் நிலத்தில் விளைந்த்தாக இருக்கும்.
சிறப்பாக சமையல் செய்யும் நண்பர்களை பார்த்திருக்கிறேன்.ஆண்கள் சிலருக்கும் அந்த கலை கைவந்து விடுகிறது.நிலத்தில் விளைந்து,அம்மா சமைத்த அந்த எளிய உணவு தந்த திருப்தியை இனி எப்போதும் அடைந்துவிட முடியாது என்று தோன்றுகிறது.எல்லாவற்றிலும் சுட்டியாக இருந்தால் அந்த குழந்தைக்கு நல்ல உணவு கிடைக்கிறது என்பது பொருள்.
மனம் நிறையும் உணவு வகைகளை தயாரிக்கும் குடும்பத்தில் பிரச்சினைகளும் குறைவாக இருக்கும்.உடைந்து போகும் வாய்ப்புகள் குறைவு.ஆரோக்கியத்தையும் அமைதியையும் தருவது இதமான உணவுதான்.
சமையல்னா சாதாரண விஷயமா?
Reviewed by haru
on
September 10, 2011
Rating:
No comments