உடல் சூட்டைத்தணித்து புத்துணர்வு பெறுவது எப்படி?
இந்து மதத்தில் தனிச் சிறப்பு பெற்ற தான்யம் அது.பிள்ளையாருக்கு ராசி லட்டில்,தர்ப்பணத்தில் பயன்படுத்தப்படுவது .நவ கிரகங்களில் சனிக்கு உரிய தான்யம் அது.இரவு நேரங்களில் வீட்டிலிருந்து வெளியே எடுத்துச்செல்ல அனுமதிப்பதில்லை.முக்கிய சடங்குகளில் நெய்க்கு பதிலாக இதன் எண்ணெய் உபயோகபடுத்துவது உண்டு.வாரம் ஓரிரு முறை தலைக்கு தேய்த்து குளிக்கவேண்டும் என்பது நடைமுறையில் உண்டு.
இளைத்தவனுக்கு எள்ளும் கொழுத்தவனுக்கும் கொள்ளும் என்பது கொழுத்தவனுக்கு கொள்ளு என்பதாக திரிந்து விட்டது.இதன் பொருள் இளைத்தவன்,கொழுத்தவன் இரண்டு வகையினருக்கும் ஏற்றது என்பதுதான்.மிக சிலருக்கு அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு உண்டு.அவர்கள் தவிர்த்து விடலாம்.அரிசி போலவோ பருப்பு போலவோ அன்றாடம் சமையலில் சேர்க்கும் வழக்கமில்லை.ஆனால் எண்ணெய்யை உபயோகப்படுத்த முடியும்.
நிலத்தில் மிகக் குறைந்த அளவு பயிரிட்டாலும் பலி கொடுக்காமல் அறுவடை செய்வது வழக்கமில்லை.வசதி இருப்பவர்கள்,ஆடு,இல்லாதவர்கள் கோழி .முன்பே சொன்னது போல இரவு நேரத்தில் எள் சேர்த்த உணவை வெளியே எடுத்து செல்லக்கூடாது என்பார்கள்.(என்னவாகும்?).சமையலில் பாகற்காய் ,சுண்டைக்காய் போன்ற கசப்பான பொருட்களுடன் எள்ளை தூளாக்கி சேர்ப்பது சில இடங்களில் வழக்கத்தில் இருக்கிறது.பொரியல்களில் சேர்ப்பதுண்டு.
சில தின்பண்டங்களில் கொஞ்சமாக சேர்ப்பார்கள். எள்ளு உருண்டை செய்வது குறித்து நிரூபன் சொல்லி விட்டார்.எண்ணெய் நிறைந்தது என்பதால் அடை செய்து எள்ளுடன் சேர்த்து இடிப்பது உண்டு.எள்ளை லேசாக வறுத்து வெல்லம் சேர்த்தும் சாப்பிடுவார்கள்.ஏதோ ஒரு வகையில் தினமும் பயனடுத்திப் பார்த்தால் அதன் விளைவுகள் உங்களுக்கே புரியும்.
உடல் சூடு என்பதை காய்ச்சல் என்றுதான் நவீன மருத்துவம் பார்க்கிறது,ஆனால் நாம் உணர்வது வேறு.தலை,உடலும் சூடாக இருப்பதாக உணர்வோம்.மலச்சிக்கல் இருக்கும்.இப்படிப்பட்ட சூட்டைத் தனித்து புத்துணர்வு பெறுவது எப்படி?இம்மாதிரி நேரங்களில் எள்ளை ஏதோ ஒரு விதத்தில் சாப்பிட்டு பாருங்கள்.அதனுடைய ஆற்றலை உணர்வீர்கள்.
உடல் சூட்டைத்தணித்து புத்துணர்வு பெறுவது எப்படி?
Reviewed by haru
on
September 21, 2011
Rating:
No comments