இணைய மையங்கள் அடல்ட்ஸ் ஒன்லியா?
இணைய மையங்களை காவல்துறையினர் அழைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.சமூக விரோதிகள் பிரௌசிங் சென்டர்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.சைபர் குற்றங்கள் பெருகி வருகின்றன.நிறைய கட்டுப்பாடுகள்.வாடிக்கையாளர்களின் அடையாள அட்டை சரிபார்ப்பதிலிருந்து கேமரா வைப்பது வரை .பலர் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இணைய மையங்கள் கால் வைக்கவே கூசுகிறது என்று நண்பர் புலம்பினார்.ஒரு வேளை சுத்தமில்லாமல் பேச்சுலர் ரூம் போல இருந்திருக்கும் என்று நினைத்தேன்.(ஒரு நாளைக்கு மூன்று முறை அறையை சுத்தம் செய்து அற்புதமாக சமைக்கும்பிரம்மச்சாரிகளையும் நான் பார்த்திருக்கிறேன்.) காலையிலேயே புலம்புகிறானே என்று நினைத்துக் கொண்டு என்னே ஏதென்று விசாரித்தேன்.
மாமியார் வீட்டுக்கு போன இடத்தில் ஒரு பிரௌசிங் சென்டருக்கு போயிருக்கிறான்.அவனுடைய எட்டு வயது மகளும் கூடவே !என்னுடைய பதிவை திறந்து படிக்க ஆரம்பிக்க,அவருடைய மகள் ஆபாச இணைய தளங்களின் பெயர்களை வரிசையாக சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.நண்பர் ஆடிப் போய்விட்டார்.
அதிர்ச்சியுடன் மகளைப் பார்த்தால் சுவர்களில்,கேபினில் எழுதி வைத்திருப்பதை காட்டியிருக்கிறார்.ஆபாச இணையதள ரசிகர்கள் தளம் மறக்காமலிருக்க எழுதி வைத்துக் கொள்வார்கள் என்று தோன்றியது.நானும் சில இடங்களில் பார்த்திருக்கிறேன்.ஆனால் இணைய மையம் வைத்திருக்கும் ஒருவர் இன்னொரு விஷயத்தை சொன்னார்.சில மையங்களின் முதலாளிகளே அப்படி எழுதி வைத்து விடுவதும் உண்டு என்கிறார்.
ஆர்வத்தில் பார்க்க ஆரம்பித்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்பது எண்ணம்.பேசாமல் அடல்ட்ஸ் ஒன்லி என்று போட்டு விடலாம்.இன்னும் சில மையங்கள் காதலர்களுக்கு உகந்த இடமாகவும் இருந்து கொண்டிருக்கிறது.எல்லா இடங்களிலும் இந்த பிரச்சினை இருந்து கொண்டிருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட மையத்திலிருந்து அதிகாரி ஒருவருக்கு மிரட்டல் மெயில் போய்விட்டது.காவல்துறையினர் விசாரிக்க வந்தார்கள்.அன்று சர்வர் மோசமாக இருந்ததால் மொத்தமாக மூன்றுபேர் தான் வந்திருந்தார்கள்.எளிதாக ஆளை பிடித்து விட்டார்கள்.அப்போதிருந்து ரகசியமாக கேமரா பொருத்திவிட்டார்.வாடிக்கையாளர்களுக்கு கூட தெரியாது.தனித்தனி கேபின்கள் இல்லாமல் மையங்கள் இருந்தால் இம்மாதிரி பிரச்சினைகள் குறையும்.
இன்று இன்டர்நெட் தேவை அதிகரித்துவிட்ட நிலையில் பெண்கள் ,குழந்தைகள் என்று பலரும் மையங்களை அணுகும் நிலை இருக்கிறது.மையம் நடத்துபவர்கள் இதை உணர்ந்து கால் வைக்க கூசாத இடமாக வைப்பது அவசியம்.
இணைய மையங்கள் அடல்ட்ஸ் ஒன்லியா?
Reviewed by haru
on
October 30, 2011
Rating:
No comments