தமிழில் பதிவர்கள் அதிகரிக்க காரணம் தமிழ்மணமா?
தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் சில விஷயங்களை தெளிவுபடுத்தியிருக்கிறது.வாழ்த்து சொல்லி வழி அனுப்புவோம்.தமிழில் புதிது புதிதாக நிறைய பதிவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.இதைப் பற்றி பதிவுலக நண்பர் ஒருவர் சாட்டில் சொன்னது, காரணம் தமிழ்மணம்தான் என்பது அவருடைய வாதமாக இருந்த்து.இது பற்றி பதிவர்கள் கருத்து சொல்ல்லாம்.அவரது கருத்து கீழே!
மற்ற திரட்டிகளில் பிரபலமானால்தான் வாசகர்களைப் பெற முடியும்.தமிழ்மணத்தில் இணைத்துவிட்டாலே ஓரளவு வாசகர்கள் வருவார்கள்.பதிவர்களுக்கு ஒரு பதிவு எழுதினோம்,நான்கு பேராவது படித்தார்கள் என்ற நிலையே தொடர்ந்து எழுதும் எண்ணத்தை உருவாக்கும்.தொடர்ந்து பதிவுலகில் இருப்பதும்,அவரைப்பார்த்து நண்பர்கள் உள்ளே வருவதும்தான் அதிக பதிவர்களுக்கு காரணம்.
இந்த ரேங்க் சிஸ்டம் ஒருவரது தகுதியை சொல்லிவிடாது என்பதே நிஜம்.அதிகம் எழுதினால் கொஞ்சம் கூடும் அவ்வளவே.அப்படி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்,அதை பிளாக்கில் வைப்போம் என்று வைத்திருக்கிறேன்.இதனாலேயே சிலர் எழுதவில்லை என்று சொல்கிறார்கள்.இருபது இட்த்துக்குள் வந்தால்தான் மதிப்பார்கள் என்பது உண்மையல்ல!
ஜனநாயகம் என்று வந்து விட்டாலே அத்தனை பிரச்சினைகளும் வந்து விடுகிறது.அரசியலை சொல்கிறேன்.அவரவர்கள் பொறுப்புணர்ந்து செயல்பட்டால் போலீஸ்,விசாரணை இதெல்லாம் தேவைப்படாது என்பது நிஜம்.திரட்டிகள் பத்திரிகை ஆசிரியர் போல செயல்பட வேண்டுமா,வேண்டாமா என்பது நாம் நடந்து கொள்ளும் வித்த்தில் இருக்கிறது.எடிட் செய்யும் வேலையை திரட்டிகளுக்கு கொடுப்பது நல்லதாக தெரியவில்லை.
பதிவர்களுக்கு வெண்மை நிறத்தின் மேல் அப்படி என்ன மோகம் என்று தெரியவில்லை.மாறுகிற அத்தனை பேரும் உஜாலாவுக்கு(கொஞ்சம் பழைய உதாரணம்தான்) மாறிக்கொண்டிருக்கிறார்கள்.டெம்ப்ளேட்கள் வெள்ளையாகிக் கொண்டிருக்கின்றன.நான் ஆரம்பத்தில் பச்சை நிறம் (ராமராஜனை போற்றுவதற்காக ஹிஹி) வைத்திருந்தேன்.அப்புறம் வெகுகாலம் வாட்டர்மார்க் இருந்த்து.மாற்றலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
இக்பால் செல்வன் ஒரு நாள் கமெண்டில் சொல்லிவிட்டார்.இந்த டெம்ப்ளேட்டுக்கு மாறினேன்.என்ன ஆச்சர்யம் என் தளத்தின் time on site அதிகரித்த்தை அனுபவத்தில் பார்க்க முடிந்த்து.அதுசரி அப்புறம் எதுக்கு இத்தனை வகை டெம்ப்ளேட்கள்.எப்போதும் வெண்மை விரும்பத்தக்கதாக இருக்கிறது.வெள்ளை நிறத்தைப் பார்த்துதான் அரசியல்வாதிகளிடம் ஏமாந்து விடுகிறார்களா?
தமிழில் பதிவர்கள் அதிகரிக்க காரணம் தமிழ்மணமா?
Reviewed by haru
on
October 01, 2011
Rating:
Reviewed by haru
on
October 01, 2011
Rating:





No comments