நிரூபனின் இன்னொரு பக்கம்.
பதிவை வெளியிட்டாரோ இல்லையோ மளமளவென்று ஓட்டு விழுகிறது.கருத்துரைகளும் அப்படியே!தொடர்ந்து மகுடம் பெற்று வியக்க வைத்தவர்.பேஸ்புக்கில் அதிக அளவில் பகிர்ந்து கொள்கிறார்கள்.எப்படி இவருக்கு மட்டும் முடிகிறது? அவர் நிறைய பேருக்கு ஓட்டு போடுகிறார்.அதனாலா? ஆனால் அது மட்டும் உண்மையல்ல
குழு அமைத்து ஓட்டு போடுவது பற்றிய அவரது பதிவுதான் நான் முதன்முதலில் படித்த பதிவு.இப்போது அவர் மீதே அந்த குற்றச்சாட்டு விழுந்த்து வேடிக்கையான விஷயம்.பிரௌசிங் செண்டரில் இருந்து படித்த்தால் கருத்துரை இடவில்லை.பின் தொடரவும் இல்லை. ஆரம்பத்தில் காத்திரமாக பல பதிவுகளையும் எழுதியவர்.அதிகம் வெளித்தெரியவில்லை.
நல்ல இடுகைகளுக்கும் பாலியல் சம்பந்தமாக தலைப்புகள் வந்து பிய்த்துக்கொண்டு போனது.தொடர்ந்து தினமும் பதிவிடும்போது அனைத்தும் சிறப்பாகவே இருக்கும் என்று சொல்ல முடியாது.சில நேரங்களில் விளையாட்டாகவும் இயங்கினார்.இக்பால்செல்வன்,நிரூபன்,நீங்களுமா? என்று கருத்துரையிட்ட்து நினைவுக்கு வருகிறது.
என்னை தன்னுடைய தளத்தில் அறிமுகப்படுத்துகிறேன் என்றபோது அவசியம் என்பதாக எனக்கு தோன்றவில்லை.250 பதிவுக்கு மேல் ஆகிவிட்ட்து.இண்ட்லி,தமிழ்மணம்,தமிழ்வெளி,தமிழ்10 என்று திரட்டிகளில் பல பதிவுகள் அதிக ஹிட்ஸும் வாங்கி விட்ட்து.என் நம்பிக்கை தவறு என்பது பிறகு தெரிந்த்து.தூங்கி எழுந்து பார்த்தபோது நிரூபன் தளத்தில் பார்த்து வந்தேன் என்று கமெண்ட் விழுந்திருந்த்து.நாற்று மூலம் எனக்கு வாசகர்களும் கிடைத்தார்கள்.இணையவெளி மிகப்பெரியது,அளவிட முடியாதது என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.
பதிவுலகில் பல பதிவர்களுடனும் நெருக்கமான உறவுகளை பேணி வருபவர் நிரூபன்.தொழில்நுட்பம் குறித்து பலருக்கும் உதவுபவர்.நேற்று பதிவுலகில் இருந்து விலகிக்கொள்வதாக எழுதியிருந்த்தை படிக்க சங்கடமாக இருந்த்து.ஆனால் அவரால் அப்படியெல்லாம் முடியாது என்பது எனக்குத் தெரியும்.இயல்பாகவே நிரூபனிடம் தகுதிகள் இருக்கின்றன.நிரூபன்,நீங்களுமா? என்ற கேள்வியில் அவரது தகுதியும் மறைந்திருக்கிறது.அவரால் எழுதாமலிருக்க முடியாது.
அன்பு என்ற சொல் சில நேரங்களில் நடிப்பாக,பொய்யாக திரிந்து ஏமாற்றத்தை தரும் விஷயமாக இருக்கிறது.இக்பால் செல்வன் இப்போதைக்கு எழுத முடியாது என்று விளக்கம் கொடுத்து நிறுத்திக் கொண்டார்.பதிவுக்காக உழைத்து தேடிதேடி பதிவெழுதியவர்.பதிவுலகில் இப்படி எழுதுபவர்கள் மிகச்சிலர்.வெகு நாட்கள் இக்பால் செல்வன் ஒரு பதிவெழுதியபோது நிரூபன் கருத்துரை இட்டார்.” சகோ! உங்களுக்கு மெயில் அனுப்பினேனே நீங்கள் பதில் தரவில்லை”.
தனக்கு வந்து ஓட்டும் கமெண்டும் போட வேண்டும் என்பதற்காக அனுப்பிய மின்ன்ஞ்சல் அல்ல அது! பிரதி பலன் எதிர்பாராத அன்பு.இன்றைய பதிவர்கள் பலருக்கும் நிரூபனின் உணர்வுகள் தெரியும்.நிரூபனின் வெற்றி ரகசியம் இதுதான்.
நிரூபனின் இன்னொரு பக்கம்.
Reviewed by haru
on
October 18, 2011
Rating:
No comments