தீபாவளிக்கு இனிப்பு சாப்பிடுவீங்களா?
நகரத்தில் மட்டுமே அதிகம் முக்கியத்துவம் பெற்ற இனிப்புகள் இப்போது கிராமத்திலும் அதிகம் இடம் பெற்றிருக்கிறது.விதம்விதமான இனிப்புகள்.கிராமத்து ஆட்களுக்கு அதன் பெயரைக் கூட அவ்வளவாக தெரியாது.தீபாவளி சீட்டுகள்தான் இதை கொண்டுவந்து சேர்த்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.நகையுடன்,பட்டாசு பெட்டியும்,இனிப்பும் காரமும் சேர்த்துக் கொடுப்பதுதான் தீபாவளி சீட்டு.கிராமங்களில் இந்த கலாச்சாரம் பரவி விட்டது.
இனிப்பு விசயத்துக்கு வருவோம்.முதலாவதாக அதில் சேர்க்கப்படும் நிறமிகள் .முதல் வரியில் உள்ள தொந்தரவுகளை உருவாக்குவதில் இதற்கு முக்கிய பங்குண்டு.நாம் உண்ணும் உணவுப்பொருட்களில் காணப்படும் அத்தனை கலர்களை உருவாக்குவதும் வேதிப்பொருட்கள்.மாத்திரை ,மருந்துகளிளும்தான்.இவை அனுமதிக்கப்பட்ட தரமானவையாய் இருந்தால் பிரச்சினை எதுவுமில்லை.பல இடங்களில் அப்படி இருப்பதில்லை என்பதே நிஜம்.
மக்களின் மனோபாவம் விலை குறைவென்றால் அங்கே கூட்டம் கூடிவிடுகிறது.தரமும் அதற்கு தக்கபடிதான் இருக்கும்.இன்னொன்று நெய் என்பதை பெயருக்கு சேர்த்திருப்பார்கள்.இல்லாவிட் டால் அப்படி வாசனைக்கு இருக்கும்.மற்ற சேர்க்கைகளில் வயிற்று உபாதைகள் நிச்சயம்.
ஒரு கடையில் பார்த்தேன்.இனிப்புகள் அதிக விற்பனை ஆகும் என்பதால் கண்ணாடிப் பெட்டிகளுக்கு மேலே அடுக்கி வைத்திருக்கிறார்கள்.சில இடங்களில் அரைகுறையாக பாலிதீன் கவர்கள் மூடப்பட்டுள்ளன.காற்றில் வீதியில் இருக்கும் அழுக்குகள் பெரும்பாலும் அதில் விழுகிறது.பேருந்து செல்லும்போது ஏற்படும் புழுதியும் அதில் சேர்ந்து கொள்கிறது.ஆனாலும் வாங்குபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.அப்புறம் மருத்துவமனைகளுக்கும் அலைகிறார்கள்.
அரசாங்கம் கவனமாக செயல்பட்டால் இவையெல்லாம் தவிர்க்கக் கூடியவை.தீபாவளிக்கு வீட்டில் செய்யும் சிறப்பு இனிப்பு ஒன்று உண்டு.கௌரி விரதத்தில் படைப்பார்கள்.கொஞ்சம் அதிகமாக வேலை வாங்கும்.அரிசிமாவு இடித்து,பாகு எடுத்து எண்ணெய்யில் பொரிக்கும் அதிரசம்.வெல்லம் சேர்ப்பதால் இரும்பு சத்து நிறைந்த பலகாரம்.கடையில் விற்கும் இனிப்புகளை விடவும் இதெல்லாம் பரவாயில்லை.
தீபாவளிக்கு இனிப்பு சாப்பிடுவீங்களா?
Reviewed by haru
on
October 23, 2011
Rating:
No comments