குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும்
நாம் வளமாகவும் நலமாகவும் இருக்க எண்ணுகிறோம்.பணம் சம்பாதிக்க நாள் முழுக்க உழைக்கிறோம்.உடலையும் மனதையும் புதுப்பித்துக்கொள்ள தூங்குகிறோம்.பணம் சம்பாதிப்பது,சாப்பிடுவது,தூங்குவது இதையெல்லாம் தாண்டி பொழுதுபோக்கு என்று இருக்கவே செய்கிறது.
ஓய்வும் கிடைக்கத்தான் செய்கிறது.சில நேரங்களில் நேரம் சலிப்படையச் செய்கிறது.போர் அடிக்கிறது என்று சொல்வோம்.அப்போது ஒவ்வொருவரும் சில செயல்களை செய்கிறார்கள்.சிலருக்கு புத்தகம்,சிலருக்கு இசை,தொலைக்காட்சி,சினிமா,நண்பர்கள்,இணையம் என்று பலவாறாக உண்டு.
பொழுதுபோக்கு என்று இவற்றை சொல்கிறோம்.ஆனால் உற்று கவனித்தால் மொத்த வாழ்க்கையும் பொழுதை போக்குவதுதான் என்று தோன்றுகிறது.போகட்டும்.இந்த பொழுது போக்குகள் ஒவ்வொருவருவருக்கும் ஒவ்வொரு மாதிரி எப்படி உருவாகின்றன? அவரவர் வாழ்ந்து வந்த சூழல் இதை பெருமளவு தீர்மானிக்கிறது.
வாழ்வில் பொழுதுபோக்குகள் செலுத்தும் ஆதிக்கம் மிக அதிகம்.ஒருவரை சிறப்பாக செயல்பட்த் தூண்டுவதிலும்,நல்ல உறவுகளை வளர்ப்பதிலும் இவை பெருமளவு பங்கு வகிக்கின்றன.நல்ல இசை கேட்பதை பொழுதுபோக்காக கொண்டவர் அமைதியான மனநிலையை பெறுகிறார்.நல்ல மனநிலை உற்சாகமாகவும்,சிறப்பாகவும் செயல்புரியத் தூண்டுகிறது.
புத்தகங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத விஷயம் இருக்கிறதா என்ன? வாசிப்புப் பழக்கம் என்பது வரம்.மனிதனை சீர்படுத்துவதிலும்,ஆளுமையை உருவாக்குவதிலும்,நல்ல உணர்வுகளை மேம்படுத்துவதிலும் புத்தகத்திற்கு நிகர் வேறெதுவுமில்லை.இன்றைய வாசிப்பு புத்தகம்,தாண்டி இணையத்தில் விரிந்து நிற்கிறது.
சினிமா,தொலைக்காட்சி போன்றவையே இன்றைய அதிகமான மக்களின் பொழுதுபோக்கு.சீரியல்கள் நல்ல உணர்வுகளை வளர்ப்பதாக நான் நம்பவில்லை.நல்ல சினிமாவும்,மோசமான சினிமாவும் இருக்கின்றன.தொலைக்காட்சியில் நகைச்சுவை,செய்திகள் என்று பலவாறாக கிடைக்கிறது.
இன்னும் ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்ல்லாம். ஒவ்வொரு பொழுதுபோக்கும் ஏதோவொரு வித்த்தில் நம் அன்றாட செயல்களின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.நல்ல பொழுதுபோக்குகளை வளர்த்துக் கொள்வதில் நமது வெற்றியும் மகிழ்ச்சியும் அடங்கியிருக்கிறது.எப்போதாவது கிடைக்கும் ஓய்வு நேரம் அன்றாட செயல்களில் ஆதிக்கம் செலுத்துகிறது.
நல்ல பொழுதுபோக்கு கொண்ட குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்.சந்தேகம் எதுவும் வேண்டாம்.குழந்தைகளுக்கு பாடப் புத்த்கங்களைத் தாண்டி வாசிப்பு பழக்கத்தை உருவாக்கலாம்.நாம் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு அவர்களிடம் அந்த பழக்கத்தை வளர்க்க முடியாது.
குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும்
Reviewed by haru
on
November 25, 2011
Rating:
No comments