Ads Below The Title

தாயத்து கட்டினால் துன்பம் தீருமா?


                               மந்திரம் சொன்ன தாயத்து என்று சொல்வார்கள்.செப்புத்தகட்டை சுற்றி கையிலோ,அரைஞாண் கயிற்றிலோ கட்டியிருப்பார்கள்.சிலரிடம் பார்த்திருக்கிறேனே தவிர நானோ,எங்கள் குடும்பத்திலோ கட்டி பார்த்திருக்கவில்லை.பெரும்பாலும் இடுப்பில் இருக்கும் என்பதால் கவனிக்க வாய்ப்பில்லை.
                               மச்சான் ஒருவனுக்கு போலீஸ் வேலை கிடைத்த்து.ரத்த சம்பந்தமான உறவினர் அல்ல! கிராமங்களில் மாமன்,மச்சான் என்று வேறு சமூகமாக இருந்தாலும் அப்படி உறவு முறை சொல்லி அழைப்பது வழக்கம்.பயிற்சிக்கு போன பிறகு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று என்னிடம் சொன்னான்.நான் யோசிக்காமல் அவனுடைய அம்மாவிடம் சொல்லிவிட்டேன்.

                               தன் பையனுக்கு கஷ்டம் என்ற வார்த்தை ஒரு தாயிடம் ஏற்படுத்திய உணர்வுகளை அப்போதுதான் நேரில் பார்க்கிறேன்.கண்ணில் நீர் கசிய ஆரம்பித்துவிட்ட்து.அடுத்த நாள் மாலை என்னை தேடிக்கொண்டு வந்துவிட்டார்.அவனுக்கு ஒரு லட்டர் போட வேண்டும்’’என்றார்.விடியற்காலை எழுந்துபோய் இதை செய்துகொண்டு வந்தேன்.”.அவர் கையில் ஒரு தாயத்து.இதை அவனுக்கு அனுப்பிவைக்கவேண்டும்.
                                எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவரை விமர்சிக்க விரும்பவில்லை.எனக்கு பிடிக்கவில்லை என்று அவர் புரிந்துகொண்டிருக்கவேண்டும்.இந்த காலத்துப் பசங்களுக்கு இதெல்லாம் புரியாதுஎன்றார்.சரி நான் அனுப்பிவிடுகிறேன் என்றேன்.” ”ஒரு வாரத்திற்கு அசைவம் சாப்பிடக்கூடாது, கோயிலில் போய் பூசை செய்து அப்புறம் கட்டவேண்டும்.மறக்காமல் எழுதி அனுப்பவேண்டும்

                                 பணத்தையும் தாயத்தையும் கொடுத்துவிட்டு போய்விட்டார்.எனக்கு என்னென்னவோ யோசனை.அவருக்கு இந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது யாராக இருக்கும்? அவருடைய அம்மா அல்லது குடும்பம்,சமூகம்.வழிவழியாக வந்து கொண்டிருக்கிறது.எதிராக பேசினால் நம்மை மோசமாக கூட விமர்சிப்பார்கள்.நான் அதை கூரியர் தபாலில் அனுப்பிவிட்டேன்.
                                   போலீஸ்கார மச்சான் என்னிடம்’’ அவங்கதான் ஏதோ சொல்றாங்கன்னா நீ என்னடா?’’ .ஆனால் நான் என்ன செய்யமுடியும்.அவனது தாய் அப்போதுதான் நிம்மதி அடைவார்.அவரது ஆறுதல்தான் பெரிய விஷயம்.இப்போது துக்கம்,விழாக்கள் போன்றவற்றில் பல சடங்குகள் இருக்கின்றன்.மெத்தப்படித்தவர்கள்,அதிகாரிகள் எல்லாம் சடங்குகளை செய்கிறார்கள்.பிடிக்கிறதோ,இல்லையோ பெற்றோருக்காக,சமூகத்திற்காக செய்து கொண்டிருக்கிறார்கள்.

                                  தாயத்து போன்ற விஷயங்களெல்லாம் நம்பிக்கைதான்.மூட நம்பிக்கை என்று வைத்துக் கொள்வோம்.கட்டிய பிறகு எதிர்பார்த்த விளைவுகள் நடப்பதும் சாத்தியம்தான்.இனி சரியாகப்போய்விடும் என்று மனதில் ஏற்படும் நம்பிக்கை பாதி குணப்படுத்தி விடுகிறது.அப்புறம் துன்பத்தால் ஏற்பட்ட சோர்வு மறைந்து செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.நம்பிக்கை நோய்களை குணமாக்குமா? என்ற பதிவிலும் ஓரளவு சொல்லியிருக்கிறேன்.
                                  இன்று பேருந்தில் வரும்போது பார்த்தேன்.பலர் கைக்குழந்தையுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள்.தாயத்து கட்டுவதற்காக நிற்கிறார்களாம்.குழந்தைகளுக்கு அதிகமாக கட்டுவதாக சொன்னார்கள்.குழந்தைகள் தங்களுடைய பிரச்சினைகளை விளக்கி சொல்லமுடியாது.சத்துக்குறைபாடோ,தலைவலியோ,உடல்வலியோ சோர்வாக இருக்கும்.தாயத்து கட்டவேண்டும் என்று யாராவது வழி காட்டுகிறார்கள்.
                                  போலீஸ்காரன் விஷயத்தை விட்டுவிட்டேன்.விடுமுறையில் வந்திருந்தான்.என்னைப்பார்த்து வெகுநேரம் பேசிவிட்டு போனான்.இப்போது பழகிப்போய்விட்ட்தாம்.அவனுடைய அம்மா மாலை என்னைத் தேடிக்கொண்டு வந்திருந்தார்.ஏதோ இனிப்பு,இப்போது சரியாக  நினைவில்லை.எனக்கு கொடுத்துவிட்டு சொன்னார்.’’அவனுக்கு பிடிக்கும் என்று செய்தேன்,அந்த தாயத்தை அவன் கழுத்தில் கட்டியிருக்கிறான்,நான் பார்த்தேன்என்றார்.அவர் சந்தோஷமாக இருந்தார்.

தாயத்து கட்டினால் துன்பம் தீருமா? தாயத்து கட்டினால் துன்பம் தீருமா? Reviewed by haru on December 04, 2011 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]