குழந்தைகளிடம் வளர்க்கவேண்டிய திறமைகள்.
பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டியம் கட்டாயத்தில் இருக்கிறார்கள். கிடைக்கும் நேரத்தையும் தொலைக்காட்சிப்பெட்டி விழுங்கித் தொலைக்கிறது.தாத்தா பாட்டியும் அருகில் இல்லை.பக்கத்தில் இருந்தாலும் அவர்களுக்கு குழந்தைகளை வசீகரிக்கும் கதைகள் தெரியாது. அவர்களும் தொலைக்காட்சிப்பெட்டியே கதியாக கிடக்கிறார்கள்.இன்று குழந்தைகளையின் நிலை பரிதாபகரமானது.வாய்ப்பு கிடைத்தால் யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு விலகிவிடவே முயற்சி செய்கிறார்கள்.இன்று பலரிடமும் காணப்படும் நோய்க்கூறுகளுக்குக் காரணம் சமூகத்தை எதிர்கொள்வதில் உள்ள பிரச்சினைகள்தான்.
நல்லவன் கெட்டவனை பிரித்தரிய முடியவில்லை.யாரை நம்பி என்ன பேசுவதென்று தெரியவில்லை.உடனிருப்பவர்களை புரிந்து கொள்வது எளிதாக இல்லை.நாலுபேர் மதிப்பதில் பெரும்பிரச்னை நிலவுகிறது.விவாகரத்துக்கள்அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.மதிப்பீடுகள் சரிந்துகொண்டிருக்கின்றன.புரிந்துகொள்ளும் திறனையும்,பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வலிமையையும் உருவாக்குவதே முக்கியமானதாகத் தோன்றுகிறது.
ஒருவர் பேசுவதை பொறுமையாகவும் கவனமாகவும் கேட்டாலன்றி அவரை நம்மால் புரிந்துகொள்ள முடியாது.கவனமாக கேட்பது என்பது அவசியம் வளர்க்கவேண்டிய திறமை.இதற்கு பெற்றோரே நல்ல முன் மாதிரியாக இருக்க முடியும்.பள்ளியில் இருந்து வந்தவுடன் அன்று நடந்த பாடங்களையும்,நிகழ்வுகளையும் கேளுங்கள்.அதிக ஆர்வத்துடன் கேளுங்கள்.இன்னும் இன்னும் கூறுமாறு உற்சாகப்படுத்துங்கள்.வேறு எவற்றிலும் கவனத்தை சிதறவிடவேண்டாம்.உண்ணும்போது கேட்கவேண்டாம்.அவர்களது உணர்வுகளை கவனியுங்கள்.நீங்கள் கவனித்த விஷயத்தை அவர்களிம் தெரியப்படுத்துங்கள்.
குழந்தைகள் பெற்றோர்களையே பின்பற்றுகின்றன என்பது நமக்குத்தெரியும்.தாய்தந்தையைப் பின்பற்றி கவனமாக்க் கேட்பது அவர்களுக்குப் பழக்கமாகிவிடும்.குழந்தைகளிடமும் இத்திறமை இயல்பாக உருவாகிவிடும்.அன்றைய நிகழ்வுகளை பெற்றோரிடம் சொல்ல வேண்டிய நிலையில் பள்ளியில் முழுமையாக கவனிக்கும் திறமை உருவாகும்.இதனால் அவர்களது நினைவாற்றல் நாமே வியக்கும் அளவு அதிகரிப்பதை உணரமுடியும்.சென்ற பதிவில் குறிப்பிட்டுள்ளவாறு வெளியே கொட்டிவிடுவதால் மனச்சுமை அகன்றுவிடும்.
உற்றுக்கேட்கும் பெற்றோர்களிடம் மட்டுமே குழந்தைகள் அதிக நெருக்கமாக இருப்பார்கள்.உணர்வுப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வார்கள்.வளரிளம்பருவத்தில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ஏற்படும் இடைவெளி பெருமளவு குறையும்.குடும்பத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் புரிந்துகொள்ளும் திறன் அதிகரிக்கும்.இப்படி எல்லாம் செய்வானென்று நான் நினைக்கவில்லை என்று புலம்ப வாய்ப்பில்லாமல் போகும்.உறவினர்களை நண்பர்களை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும் என்பதால் வாழ்க்கை எளிதாக இருக்கும்.
கேட்டல் திறன் பற்றி பலர் எனது பதிவில் ஏற்கனவே படித்திருக்கமுடியும்.நம் எல்லோருக்கும் இத்திறமை அவசியமானதுதான்.ஆனால் நம்மில் பலருக்கு சாத்தியமில்லாமல் இருக்கிறது.நகைச்சுவை என்றால் பிடிக்கிறது.பிரச்சினைகளை பேசும்போது நமக்குப்பிடிப்பதில்லை.குழந்தை நிலையிலேயே வளர்த்துவிட முடியும். குழந்தைகள் மீதான வன்முறை,நெருக்கடியான சூழலில் நேரம் ஒதுக்க முடியாத நிலையில் இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும்.தவிர ஐந்தில் வளைப்பது மிக எளிதான ஒன்று.குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கித்தான் ஆகவேண்டும்.இல்லையெனில் நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் கண்ணைவிற்று சித்திரம் வாங்கிய கதைதான்.இன்னும் சில முக்கியமான விஷயங்கள் அடுத்த பதிவில்...
குழந்தைகளிடம் வளர்க்கவேண்டிய திறமைகள்.
Reviewed by haru
on
July 07, 2013
Rating:
Reviewed by haru
on
July 07, 2013
Rating:





No comments