Ads Below The Title

மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு என்ன வழி?

விரிவாக எழுதவேண்டும் என்று சில வாரங்களாக நினைத்துக்கொண்டிருந்தேன்.திருமண வாழ்க்கை குறித்து சர்வதேச அளவில் பல மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன.பெற்றோர் பார்த்து நடந்தாலும் காதல் மூலம் பந்தம் ஏற்பட்டாலும் பிரச்சினைகள் இருக்கின்றன.பெயரளவில் வாழும் தம்பதிகள்,விவாகரத்தை நாடி ஓடும் ஜோடிகள் என்று இங்கே சாதாரணம்.

சமூகத்தின் முக்கியமான நிறுவனம் ஒன்று சிக்கலில் இருக்கிறது.1950 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றை படித்தேன்.எழுத்தாளர் வல்லிக்கண்ணன் எழுதிய நல்ல மனைவி அமைவது எப்படி? என்ற சிறிய புத்தகம் அது.ஆச்சர்யமாக இருக்கிறது.அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் விரும்பத்தக்க மாற்றங்கள் இல்லை.பதிவிற்கான என்னுடைய உழைப்பை வெகுவாகக் குறைந்து விட்டது.திருமணங்கள் முடிவுசெய்யப்படும் முறையை வல்லிக்கண்ணன் கூறுகிறார், 

பெரும்பாலும்  எல்லாம் வல்ல இறைவன் திருவருளை முன்னிட்டு சர்வமங்களமும் கூடிபயோக சுபதினத்தில் நல்ல முகூர்த்தம் பார்த்து பெரியோர்கள் நிச்சயித்து முடிக்கிற கல்யாணங்கள் அவர்களது ஆசை,பணம்,சொத்து, அந்தஸ்து முதலிய போலி படோடாபங்களின் மீதே எழுவதால் என்ன விளைவுக்கு வழி செய்கின்றன?

ஓடிப்போனவள் கதையும்,தொழிற்காரியைத் தேடிப்போகிறவன் கதையும் சர்வசாதாரணமாவதுதான் கண்ட பலன்கள்.


காதல் திருமணங்கள் எப்பிடி தோற்றுப்போகின்றன என்பதற்கு அவருடைய கருத்துக்கள் முக்கியமானவை.உணர்ச்சிகள் செயலில் இருக்கும்போது சிந்திப்பது சாத்தியம் இல்லை.
 
இளைஞனும், இளைஞியும் சந்தித்து உறையாடும்போது முதலில் சரியாக எடைபோடுவதும்,பண்பு, குணநலம் ஆகியவற்றை கணிப்பதும் சாத்தியமேயல்ல.
 உளவியலாளர்கள் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஒரே பண்புடையவர்கள்தான் திருமணத்தில் வெற்றி பெறுவார்கள்.பொறுத்துப்போ! அட்ஜஸ்ட் செய்து போ!! என்று சொல்கிறோம்.உண்மையில் அது நல்ல விளைவைத் தருவதில்லை.அட்ஜஸ்ட் செய்து போ என்பதெல்லாம் வெப்பத்துக்கு குளிர்நீர் அருந்துவது போலத்தான் சூட்டை உணர்ந்துதான் ஆகவேண்டும்


இலக்கிய ரசிகனான ஒருவன் கல்வி வாசனையற்ற முண்ட்த்தை விரும்பமுடியாது.கலையின் செல்வியான பெண் பணத்தில் மட்டுமே குறியான மண்டூகத்தை ரசிக்கமுடியாது.
 

உதாரணமாக கணவருக்கு சீரியல் பிடிக்காது.அவருக்குப்பிடித்த படம் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.யார் விட்டுக்கொடுத்தாலும் மனதளவில் பாதிப்புகள் இருக்கும். ஒருவர் ரசனையை ஒருவர் விமர்சித்து சைகையிலாவது எதிர்ப்பைக்காட்டவே செய்வார்கள்.வேறு வழியில்லை இதுதான் வாழ்க்கை என்று கருதியே பிழைப்பு நடந்து கொண்டிருக்கிறது.அப்போது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அவர் கொடுக்கும் தீர்வு.

ஒருவரை ஒருவர் அறியாத-கல்யாணமாகாத-பெண்கள் ஆண்களில் யாரையும் யாருக்காவது தாலிகட்டி வைக்கும் வழக்கம் தொலையவேண்டும்.கல்யாணம் செய்ய விரும்புகிறவன் தனக்கு வருகிறமனைவி இப்படி இப்படி இருக்கவேணும் என விரும்புவது இயல்பு.பெண்ணின் பண்பும் அதுவே.இவர்களுக்குத்துணை புரியும் கல்யாண கழகங்கள் ஸ்தாபிதமாக வேண்டும்.


ஒவ்வொருவரின் உண்மையான குணச்சித்திரப் பட்டியல் தயாரிக்கவேண்டும்.
தங்கள் விருப்பு வெறுப்புகளை,தங்கள் குணங்கள் குறைகளை,தங்கள் ஆசை கனவுகளை,தாங்கள் விரும்புகிற எதிரினத்து நபர் எப்படி அமையவேண்டும் என்கிற கருத்தை ஒளிவுமறைவின்றி கழகத்தில் பதிவு செய்யவேணும்.

அவர் திருமணத்துக்கு முந்தைய (PRE-MARITAL COUNSELLING)உளவியல் ஆலோசனை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.இப்போதும் இங்கே பெரிய அளவில் முக்கியத்துவம் பெறவில்லை.இருவரது குணங்கள்,ஆர்வங்கள்,பிரச்சினையை,மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் திறன்,பாலியல் ஆர்வங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து முடிவு செய்யவேண்டும்.COMPATIBILITY QUOTIENT என்னும் உளவியல் சோதனை முறை இருக்கிறதுகாதலை முடிவு செய்யும் முன்பாகவும் இதைப் பெறலாம்.
 வல்லிக்கண்ணன் அவர்களின் படைப்புகள் படிக்க http://www.tamilvu.org/library/libindex.htm
மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு என்ன வழி? மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு என்ன வழி? Reviewed by haru on September 23, 2013 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]