சென்னை பெருநகர ஆட்டோக்கள்.
கிருஷ்ணகிரியில் ஐந்து ரூபாயில் பிரதான சாலையில் ஆட்டோவில் பயணிக்க முடியும்.இருபதாண்டுகளுக்கு மேலாகஆட்டோக்கள் ஷேர் ஆட்டோக்கள் போலத்தான்.ஷேர் ஆட்டோக்களுக்கு முன்னோடி என்றுகூட சொல்லலாம்.மூன்று பேர் சேர்ந்தால் எங்கே இறங்கினாலும் ஐந்துரூபாய்.சில நேரங்களில் மூன்று பேர் சேரும்வரை காத்திருக்க நேர்ந்தாலும் நமக்கு வசதி.
வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டது.அதிகம் ஆட்டோவை பயன்படுத்த வேண்டிய அவசியம் நேர்ந்துவிடும்.மழை தூறிக்கொண் டிருக்கும்போது பேருந்துக்கு காத்து நிற்பதைவிட ஆட்டோவில் போகலாம் என்றிருக்கும்.பெரும்பாலான ஆட்டோக்களில் மீட்டர் பொருத்திவிட்டார்கள்.மீட்டர் பொருத்திய பின்னர் என்னதான் நடக்கிறது?
சென்ட்ரலில் இறங்கி ஆட்டோ கேட்டேன்.வழக்கமான பல்லவியாக ஒரு தொகையைச் சொன்னார்."மீட்டர் பொருத்திட்டீங்கதானே?"
"நைட் டைம் சார்"
"இப்போதுதான் ஒன்பது மணி ஆகிறது" என்றேன்.
கொஞ்சம் அரை மனதுடன் மீட்டர் போட ஒப்புக்கொண்டு கிளம்பினார்.
இன்னொருவர் "வழக்கமாக நீங்கள் கொடுப்பதை கொடுங்கள் சார்"என்றார்.முன்பெல்லாம் பேரம்பேசி போனதைவிட இப்போது குறைவாகத்தான் ஆகும்.திருத்தப்பட்ட மீட்டர் பொருத்தும் முன்பு சென்ட்ரலில் இருந்து கோயம்பேட்டுக்கு 170 இருந்து 200 வரை கேட்பார்கள்.அதற்கு குறைவாக போயிருக்க முடியாது.இப்போது 120 ரூபாய்க்கு மேல் வராது.முன்பை விட பொதுமக்களுக்கு எப்படியும் லாபம்தான்.
ஆட்டோ டிரைவர் ஒருவர் இன்னொரு விஷயத்தைச்சொன்னார்," மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு சவாரி அதிகம் வருகிறது சார்".நம்பகத்தன்மை இருப்பதால் ஆட்டோவை பயன்படுத்த தயங்கமாட்டார்கள்.எனக்கு ஏற்பட்ட அனுபவத்தில் நாமாகச் சொல்லாமல் ஓட்டுனர்கள் மீட்டர் போடுவதே இல்லை.இன்னும் சிலர் திருத்திய கட்டணத்திற்கு மாறாமல் இருக்கிறார்கள்.நாமாக மீட்டர் பொருத்திய ஆட்டோவை தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கு வேறு வழியில்லை.சிறந்த குடிமகனுக்கு அழகு மீட்டர் போடச்சொல்வதுதான்.
சென்னை பெருநகர ஆட்டோக்கள்.
Reviewed by haru
on
October 23, 2013
Rating:
No comments