அய்யோ! அய்யோ! பதிவத் திருடிட்டாங்களே!-லகலக பேட்டி.
அய்யோ,அய்யோன்னு ஏன்யா சத்தம் போடறீங்க? யாரு உங்க பதிவ திருடினது? சுத்த நான்சென்ஸா போச்சு! திருட்டுன்னா என்ன்ன்னு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?இப்படித்தான் ஒரு பதிவர் ஆக்ரோஷமாக வந்தார்.அவரை இழுத்துப்போய் அவருடைய பிளாக்கை ஓபன் செய்து காட்டினேன்.அவர் எழுதியது அங்கேயே இருந்த்து.சாரி சொல்லி சர்பத் வாங்கிக் கொடுத்துவிட்டு போனார்,நாங்களும் மனுஷங்கதான்!’’
ஆதங்கத்துடனும்,வருத்த்துடனும் மனம் திறந்து பேசுகிறார் வலைத்தள அதிபர் வக்கில்லாதவன்(புனை பெயராம்).அவர் மீதான தவறான குற்றச்சாட்டுகள் அம்புகளாய் பாய்ந்து அவரது மனத்தை புண்படுத்தியிருப்பதை உணர முடிந்த்து.பல பதிவர்கள் தங்களது பதிவுகளை திருடி தளத்தில் போட்டுக்கொள்கிறார் என்று குற்றம் சாட்டி பதிவு எழுதியது அவரை வேதனைக்குள்ளாக்கியிருந்த்து.அவருடன் பேசியதிலிருந்து சென்சார் செய்யப்படாமல் அனைத்து பகுதிகளும்:
நீங்கள் சொந்தமாக எழுதியதுண்டா?
அது பெரும் பிரச்சினையில் முடிந்து விட்ட்து.மதுப்பழக்கம் தவறு என்று எழுதினேன்.அடுத்த நாள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டிய நிலை.தமிழ்நாட்டில் மொத்தமாக குடிப்பதை நிறுத்திவிட்டார்கள்.அரசாங்கத்தை நினைத்து ஒரு நிமிடம் பதறிப்போய்விட்டேன்.உடனே மது குடிப்பது முடி,நகம் வளர உதவி செய்யும்,கொஞ்சமாக குடித்தால் தப்பில்லை என்று இன்னொரு கட்டுரை எழுதியதும் பிரச்சினை தீர்ந்த்து.
அப்போதிருந்து காபி பேஸ்ட் தானா?
ஆமாம்,வலைப்பதிவுகளில் சில நேரம் நல்ல கட்டுரைகள் கிடைக்கிறது.பத்திரிகைகளிலும் எடுப்பேன்.கல் தோன்றி முன் தோன்றா சாரி! கம்பியூட்டரில் காபி,பேஸ்ட் என்று எதற்காக இருக்கிறது? வடிவமத்தபோதே கொண்டுவந்து விட்டார்கள்.ரைட் கிளிக் செய்தால் copy என்று வருகிறது.அதே போல சுலபமாக பேஸ்ட் செய்யலாம்.தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால்தான் தமிழ் வளரும்.
நீங்கள் சந்த்தித்த பிரச்சினைகள் என்ன?
காபி பேஸ்ட் செய்வதே பிரச்சினைதான்.சொந்தமாக எழுதுபவர்கள் கொஞ்ச நேரத்தில் எழுதிவிடுகிறார்கள்.நாங்கள் வாசகர்களுக்கு பிடித்த்தை தர பலதையும் படிக்க வேண்டும்.தவிர காபி செய்யும்போது எழுதியவர் பெயரும்,பிளாக் முகவரியும் விடுபட்டுப் போகிறது.தவறுவது யாருக்கும் சகஜம்.உடனே திருட்டு என்று சொல்லிவிடுகிறார்கள்.
மறக்க முடியாத சம்பவம் ?
ஒரு முறை பிரபல பத்திரிகையிலிருந்து காபி செய்யும்போது விளம்பரத்தை காபி செய்து போட்டுவிட்டேன்.தவறாக நிகழ்ந்த விஷயம்.ஆனால் கம்பெனியிலிருந்து வந்து பாராட்டிவிட்டு இரண்டு துணி சோப்பு கொடுத்து விட்டுப் போனார்கள்.
உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?
எப்படியாவது வெளிநாட்டிலிருக்கும் கறுப்பு பணத்தை காபி செய்து இந்தியாவில் பேஸ்ட் செய்யவேண்டும்.முடியுமா? என்று கேட்கிறார்கள்.அனைத்து காபி பேஸ்ட்டர்களும் ஒன்று சேர்ந்து முயற்சி செய்தால் முடியாதா? ஒரு வலைப்பதிவில் ரூபாய் நோட்டு படம் போட்டிருந்தார்கள்.காபி செய்து பேஸ்ட் செய்து பார்த்தேன் ஈஸியாக இருக்கிறது.
அய்யோ! அய்யோ! பதிவத் திருடிட்டாங்களே!-லகலக பேட்டி.
Reviewed by haru
on
September 13, 2011
Rating:
No comments