தொப்பையைக் கூட்டும் அரிசி உணவுகள்
அந்த ஹோட்டலில் சாப்பிடப்போவது வழக்கம்.ஒரு சப்பாத்தி,அளவு சாதம்,கூட்டு,பொரியல் என்று நன்றாகவே இருக்கும்.வெகு நாட்கள் கழித்து அங்கே மீண்டும் போனபோது சாதம் அன்லிமிடெட் ஆக மாற்றிவிட்டிருந்தார்கள்.பக்கத்தில் அன்லிமிடெட் ஹோட்டல் இருப்பாதால் இங்கே மதிய சாப்பாடு அவ்வளவாக போகவில்லை சார் என்றார்கள்.
இப்படிப்பட்ட நண்பர்களை நான் பார்த்திருக்கிறேன்.’’பணம் தரலையா சார்?’’ வயிறு நிறைய சாப்பிடலாமே! எவ்வளவுதான் சாப்பிட முடியும்? இலவசமாக,அதிகமாக கிடைத்தால் விட்டுவிடாத மனோபாவம் என்றுதான் தோன்றுகிறது.இத்தனைக்கும் அதிகம் உழைக்கும் ஆசாமிகள் இல்லை.உடல் உழைப்பில்லாதவர்கள்தான்.
”இப்போ இருபது முப்பது வருஷமாகத்தான் சார் அரிசிசாப்பாடெல்லாம்! அதனால்தான் ஜன்ங்க ஹாஸ்பிடல்லயும்,மாத்திரை கடையிலையும் அலையிறாங்க! என்றார் ஒரு பெரியவர்.சத்தியமான வார்த்தைதான்.கிராமத்து விவசாயிகளுக்கு நெல் விளையும் சில இடங்கள் தவிர சோளம்,கம்பு,கேழ்வரகு,சாமை போன்றவையே முக்கிய உணவு.
அரிசி உணவுகளில்,குறிப்பாக சாதம் சாப்பிடும்போது அதிகம் சாப்பிடுகிறோம் என்பதுதான் நமது பிரச்சினை.அதனுடன் பொரியல் போன்ற உப பொருட்கள் அதிகம் இருப்பதால் சாதம் கொஞ்சம்,கூட்டு,அப்பளம் என்று உண்ண ஆரம்பிக்கும்போது ஒரு கட்டு கட்டி விடுகிறார்கள்.தென்னிந்தியாவில் உடல் உழைப்பில்லாதவர்கள் சாப்பிடும் மதிய உணவு மிக அதிகம்.
மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை சோற்றுக்கு பதிலாக சப்பாத்தி சாப்பிடுமாறு கூறுகிறார்கள்.சப்பாத்தி நீரிழிவு நோய்க்கு உகந்த உணவு என்பதற்காக அல்ல! சப்பாத்தி சாப்பிடும்போது மிக குறைவான அளவு சாப்பிடுவீர்கள் என்பதால்தான்.கூட பாயாசம்,தயிர் ஸ்வீட் என்று சேர்மான்ங்களும் இருக்காது.
அரிசி உணவுகள் கார்போஹைட்ரேட் நிறைந்தவை.அவை சக்தி தரும்.உடலால் உழைப்பவர்கள்,கூலித்தொழிலாளிகள் சாப்பிடும்போது கலோரிகள் எரிக்கப்பட்டு விடுகின்றன.மற்றவர்களுக்கு அப்படியல்ல! இந்த உணவுகள் தொப்பைக்கு மட்டுமல்ல,இந்தியாவை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நீரிழிவு நோய்க்கும் அடிப்படையாக இருக்கிறது.
வட இந்தியாவை ஒப்பிடும்போது தென்னிந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் அதிகரித்து வருகிறார்கள்.அரிசி நுகர்வு தென்னிந்தியாவில் அதிகம் இருப்பதும் காரணம்.தவிர விவசாய தொழில்நுட்ப கருவிகள் வந்த பின் கிராமங்களிலும் உடல் உழைப்பு குறைந்து விட்ட்து.அதிகமான கலோரிகள் உடலில் சேமிக்கப்படுவதே தொப்பை போன்றவற்றுக்கு முக்கிய காரணம்.
ஃபுல் மீல்ஸ்,அன்லிமிடெட் மீல்ஸ் என்பதை விடுத்து எளிமையான மதிய உணவுகளை உண்பதும்,(லெமன் சாதம்,சாம்பார் சாதம் எனும்போது குறவான நுகர்வு இருக்கும்.)ஜன்க் ஃபுட் எனப்படும் குப்பை உணவுகளையும் தவிர்ப்பதும் அவசியமானவை.நம்மை மாற்றிக்கொள்ள முடிந்தால் மாத்திரைக்கடைகளுக்கும்,மருத்துவமனைகளுக்கும் அலைவது குறையும்.
தொப்பையைக் கூட்டும் அரிசி உணவுகள்
Reviewed by haru
on
October 13, 2011
Rating:
No comments