என்றும் இளமையாக இருப்பது சாத்தியமா?
ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டும்போது மனம் சிலருக்கு படபடக்கும்.மீசையில் ஒரு முடி நரைத்தால் அதை வெட்டியாக வேண்டும்.அதிகமானால் சாயம் பூச வேண்டும்.பார்ப்பவர்கள் கண்ணுக்கு இளமையாய் தெரிந்தே ஆகவேண்டும்.ஆனால் உடல் மூப்படைவதை யாரால் தடுக்க முடியும்? அப்படி நினைத்துக்கொள்வதுதான்.எனக்குத் தெரிந்த நண்பர் ஒரு அரசு அலுவலர்.இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் ஒய்வு பெற இருக்கிறார்.அவர் நரைமுடியுடன் காணப்பட்டாலும் என் கண்களுக்கு இளமையாகவே காட்சி தருகிறார்.பாடகராக ,கவிஞராக,நாடக நடிகராக ,எழுத்தாளனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.அவர் சொன்ன கவிதையைக் கேட்டு அவரது மகன் சொன்னது"என்னப்பா காலேஜ் பையன் மாதிரி கவிதை சொல்றீங்கன்னு !எனக்கும் அவர் இளமையாக இருப்பது போல தோன்றியது.
கிராமத்தில் வயதான பல இளைஞர்களை பார்த்திருக்கிறேன்.எப்போதும் குறும்பும் சிரிப்புமாய் ! பழுத்த கிழங்கள் தான்.ஆனால் அவர்களிடம் இளமை ததும்பும்.இளமை மனதில் இருக்கிறதா? உடலிலா? முகத்தில் தோன்றும் அமைதியும் ,குழப்பமும் மனதைத்தானே காட்டுகிறது.இளமை மனதில் தான் இருக்கிறது.வாலி எப்படி இத்தனை வயதிலும் அப்படி எழுதுகிறார்? வயதானாலும் பாடுபவர்களின் குரலில் இளமை கொஞ்சுகிறதே எப்படி? பல உதாரணங்கள் இருக்கின்றன.
எழுத்தோ,இசையோ,ஓவியமோ ,நாடகமோ கலைஞர்களுக்கு மூப்பில்லை என்று தோன்றுகிறது.உடலை இளமையாய் பராமரிக்க சத்துணவும்,வாயைக்கட்டுவதும் அவசியம்.நெடிய காலம் முறுக்குடன் வாழும் பலரும் வாயைக்கட்டி வாழ்பவர்களே!புகையிலையை,குடியை அவர்கள் விரும்பியதில்லை.மனதிற்கும் இது பொருந்தும்.மனதிற்கு ஆரோக்கியமானதை கொடுத்தால் இளமையாகவே இருக்கும்.உடலுக்கு ஆரோக்கியமான உணவுகள் என்று பலர் பரிந்துரைக்கிறார்கள்.ஆனால் மனதிற்கு ?
கலைஞர்களிடம் புதிதாக ஏதாவது உற்பத்தியாகிக் கொண்டே இருக்கிறது.தினமும் ஏதேனும் ஒன்றை புதிதாக கற்றுக்கொண்டே இருக்கிறார்கள்.மனம் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது.ஓடியாடி வேலை செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்தானே! மனமும் அப்படித்தான்! கற்றுக்கொண்டும்,அதன் வழியாக சிந்தித்துக் கொண்டும் இருக்கும்போது மனம் ஆரோக்கியமாக இருக்கிறது.இப்படி இருக்கும்போது கெட்ட எண்ணங்கள் உருவாவதும் இருக்காது.பிறரைப் பற்றி வம்பு பேசுவதற்கும் அவசியம் இருக்காது.பதிவுலகிலும் என்றும் இளமையே வேண்டப்படுகிறது.
தமிழ்மணம் நிர்வாகிகளின் பேட்டியில் படித்ததை என் வார்த்தைகளில் தருகிறேன்.பதிவுகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் படிக்கத் தக்கவையாக இருக்க வேண்டும்.பரபரப்பு அரசியலுக்கு அந்த தகுதி இருக்கிறதா என்று நீங்கள் முடிவு செய்ய முடியும்.அரசு அலுவலர் சொன்ன கவிதை கீழே தருகிறேன்.
ஒரு சிறுகதை தொகுதி வெளியிட்டிருக்கிறார்.கவிதை தொகுப்பு அச்சில் இருக்கிறது.மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களை கண்டிருக்கிறார்.மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது சென்னையில் வாசம்.அரசு அலுவலராக பணி கிருஷ்ணகிரியில்!அவர் வரைந்த ஓவியம் கீழே!
இன்னொரு விஷயம்.அவர் பதிவு ஆரம்பிக்க வேண்டும் என்று ஆரம்பித்து விட்டார்.தனது அனுபவங்களையும்,அரசியலையும் அவர் எழுத வாய்ப்பிருக்கிறது.அவரது வலைப்பக்கம் செல்ல:http://koodalguna.blogspot.com

Reviewed by haru
on
October 12, 2011
Rating:
No comments