சீரியஸ் பதிவரின் ஆசைக்காதல்-நகைச்சுவை
பதிவுலகில் நகைச்சுவை குறைந்து கொண்டே போகிறது.கடைசியில் என்ன கதி ஆவது என்று தெரியவில்லை.காமெடி செய்வது கஷ்டமான வேலை என்று பாக்யராஜ் விகடனில் சொல்லிவிட்டார்.பன்னிக்குட்டியாருக்கு நகைச்சுவை உணர்வு குறைந்து போய்விட்ட்தா என்று ஜோதிஜி கேட்கிறார்.நாமாவது காமெடியாக எழுதிப்பார்க்கலாம் என்றால்,”அண்ணே இது நீங்கள் எழுதியதா? என்று கேட்டு மானத்தை வாங்குகிறார்கள்.சீரியஸ் பதிவர் ஒருவரை பார்க்கப்போனேன். நாடு இருக்கும் நிலை சிரிக்கிற மாதிரியா இருக்கிறது என்று கேட்கிறார்.அவரைப் பார்த்து விட்டு வந்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று.
வாசலிலேயே பிரச்சினை.அவருடைய பெண் குழந்தை.மூன்று வயதிருக்கும்.என்னைப்பார்த்தவுடன் புன்னகை. என்னை குனியுமாறு சிரித்துக்கொண்டே சொன்னது.என் காதில் கிசுகிசுத்த வார்த்தைகள்’’அங்கிள் அப்பா அழறாங்க,ஜாலி ஹே..ஹே..ஹே.. என்று ஒரே சிரிப்பு.பக்கத்து வீட்டு பையனை அழைத்து வேறு காட்டியது “எங்க அப்பா அழறாங்கடா! நல்லாருக்கில்ல! ஒரே ஆனந்தம்.
உண்மையில் மனிதர் அழுது கொண்டுதான் இருந்தார்.அவரது கையில் நாளிதழ்.கோயம்புத்தூரில் பாதாள சாக்கடை எடுத்து இன்னும் மூடாமல் இருப்பதை புகைப்படம் எடுத்து போட்டிருந்தார்கள்.கொஞ்சம் கவனத்தை திசை திருப்பலாம் என்று பார்த்தேன்.மக்கள் தொகை பெருகிவிட்ட்து என்றேன்.அவரிடம் சமூகப் பிரச்சினைகள் பற்றித்தான் பேசமுடியும்.
”ஏன் சார் நான் கேட்கிறேன்! டாக்டர்கள் ஏன் பத்து மாதம் நாள் குறிக்கிறார்கள்? குழந்தை பெறும் காலத்தை முப்பது மாதம் ஆக்கவேண்டியதுதானே!??அரசாங்கத்துக்கும் அக்கறை இல்லை. எனக்கு வயிற்றை புரட்டியது.கொஞ்சம் சமாளித்துக்கொண்டே “அது இயற்கை அய்யா! 280 நாட்கள் ஒன்பது மாதம் பத்து நாள்.கடைசி மாத விலக்கு நாளிலிருந்து ஏழுநாள்,ஒன்பது மாதங்கள் கூட்டிக்கொள்ளவேண்டும்.அதுதான் பிரசவம் எதிர்பார்க்கும் தேதி.அதிலிருந்து ஒருவாரம் முன்போ,பின்போ குழந்தை பிறக்கும்.அவரை தெளிவு படுத்தி விட்ட்தாக எனக்கு தோன்றியது.
அதெல்லாம் நம்பாதீங்க சார்! வெளிநாட்டு சதி.இந்தியாவை ஒழிக்க நினைக்கிறார்கள் தெரிந்து கொள்ளுங்கள்.நீங்கள் யார் சொல்வதையும் நம்ப வேண்டாம்.” என்றார்.பேச்சை மாற்றலாம் என்று எனக்கு தோன்றியது.வசமாக மாட்டிக்கொண்டார்.இதில் இழுத்து விட்டுவிட்டால் நாம் தப்பித்துவிடுவோம்.”சரி இந்த காவிரிப் பிரச்சினை பெரிய பிரச்சினையாக இருக்கிறது!? என்றேன்.
ஆஹா! அந்த மாற்றத்தை எப்படி வர்ணிப்பது? ஆண்கள் வெட்கப்பட்டு அதுவரை நான் பார்த்த்து கிடையாது! அழுகை முகம் பிரகாசமாக ஒளி வீசியது.” நீங்கள் பெரிய ஆள்! உங்களுக்கு எப்படித் தெரியும்? என் முதல் காதல்! ஆறு வருடங்களாக காதலித்தேன்,ஒரு நாள் தைரியமாக கடிதம் எழுதி கொடுத்து விட்டேன்.ஒரே வரி நறுக்கென்று! “ உன்னை காதல் செய்வேன்;நான் உன்னைக் கட்டிக் கொல்வேன்”அவ்வளவுதான்
ஆற அமர படித்துவிட்டுசிரித்துக்கொண்டே என்னை அழைத்தாள்.” நானே உங்கள் வீடு தேடி வருவேன்,அது வரை என்னைப் பார்த்தால் தெரியாத மாதிரி வேறு வழியில் போய்விட வேண்டும்.பின்னால் வரக்கூடாது என்றாள்.இன்றுவரை அப்படித்தான் இருக்கிறேன்.இப்போது பார்க்கவே முடிவதில்லை.அவளுக்காகத்தான் காத்திருக்கிறேன்.
உங்களுக்குத்தான் கல்யாணம் ஆகிவிட்ட்தே? என்றேன்.இருந்தால் என்ன? காதலை விட்டுவிட முடியுமா? அவள் ஒருநாள் வருவாள் என்னைத்தேடி! என் மனைவியும் நல்லவர்தான்” கொட்டிக்கிறீங்களா? என்று கேட்காமல் சாப்பாடு கொண்டு வந்து வைக்க மாட்டார்” இரண்டு பேரும் இருந்து விட்டுப்போகட்டுமே!
உடனே நான் வீட்டுக்குப்போக வேண்டும் என்று எழுந்துவிட்டேன்.கொஞ்சம் தடுமாற்றமாக இருந்த்து.பார்த்துப்போங்கள் என்றார்.அவருக்கு நல்ல மனசு! வெளியே அவருடைய குழந்தை அதே புன்சிரிப்புடன்! என்னைக்குனியச்சொன்னது.அங்கிள் HOW DO YOU FEEL? என் பதிலை எதிர்பார்க்கவில்லை.குதித்து சிரிக்க ஆரம்பித்த்து.
டிஸ்கி: மொக்கை போடுபவர்கள் சீரியஸானால் சீரியஸ் பதிவர்கள் மொக்கை போடுவார்கள்.
சீரியஸ் பதிவரின் ஆசைக்காதல்-நகைச்சுவை
Reviewed by haru
on
October 04, 2011
Rating:
No comments