பிரபல பதிவர்கள் ஏன் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்?
பதிவுலகில் ஒரு கருத்து இருக்கிறது.பிரபலமாக இருப்பவர்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.அவர்களுக்கு வாசகர்கள் குறைந்து விடுகிறார்களா?சிலர் எழுதாமல் நிறுத்தி விடுகிறார்கள்.மதுரை குணா ஒருமுறை சொன்னார்.திருத்தணி போய் வந்தேன்,வீட்டுக்கு வந்தவுடன் அந்த அனுபவத்தை எழுதாமல் இருக்க முடியவில்லை.ஒரு பேப்பரை எடுத்து எழுத ஆரம்பித்தேன்.அப்புறம் கிழித்துப் போட்டுவிட்டேன்.
எளிதாகவே இருக்கிறது.சொல்வதற்கு ஏதாவது இருக்கும்போது எழுதாமல் இருக்க முடியாது.உள்ளே இருப்பதை வெளியில் கொட்டித்தான் ஆக வேண்டும்.ஏதோ ஒரு ஊடகம்.அது வலைப்பதிவாக இருக்கலாம்,பேப்பரில் இருக்கலாம்.பேஸ்புக்கிலும் இருக்கலாம்.மனிதன் வெளியே கொட்டுவதற்கு வசதியாக இருப்பதால்தான் இவற்றுக்கு வரவேற்பு இருக்கிறது.
சில காலம் எழுதாமல் போய்விட்டவர்கள் மீண்டும் பதிவிடுவது தவிர்க்க முடியாது.ஆனால் வெளிப்பாட்டுத்திறன் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.சிலர் போனில் நண்பர்களிடம் கதை,கதையாக பேசி விடுவார்கள்.கொஞ்சமும் வாசிப்பு பழக்கம் இல்லாமல் மற்றவர்களை பார்த்து வலைப்பதிவு ஆரம்பிப்பவர்கள் காணாமல் போனால் மீண்டும் வருவது சாத்தியமல்ல!இவை பெரும்பாலும் வெட்டி ஒட்டுதலையும்,செய்தியையும் அடிப்படையாக கொண்டிருக்கின்றன.
புதிய பதிவர்களின் வருகையும் பிரபலங்கள் மாறிக்கொண்டேயிருக்க காரணமாக சொல்ல முடியும்.தவிர வலைப்பதிவுகளில் வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் பொருளும் இன்னொரு காரணம்.அரசியல்,சினிமா,தனி மனிதனுக்கு பயன் தரும் செய்திகள் போன்றவைதான் அதிகம் படிக்கப்படுகின்றன.இவற்றையெல்லாம் குறிப்பிட்ட ஒருவர் என்றில்லாமல் யார் வேண்டுமானாலும் எழுத முடியும்.துறை சார்ந்த ஒருவர் எழுதும்போது கொஞ்சம் அழுத்தம் இருக்கும்.
கதை,கவிதை உள்ளிட்ட புனைவுகளுக்கு அதிக வரவேற்பில்லை.கதையில் சில விஷயங்களை அழுத்தமாக மனதில் நிற்குமாறு சொல்ல முடியும்.சிலவற்றை கவிதையில் சொல்ல முடியும்.நிஜமான தனித்திறமை என்பது புனைவுகளில் இருக்கிறது.ஒருவரது சிறுகதை,கவிதை போன்றவற்றை படிக்க நேரும் வாசகர் பிடித்துப்போனால் அவரை எப்போதும் பின் தொடர்கிறார்.
இன்னொன்று பதிவுகளைப்பொருத்தவரை ஒரு பதிவை வெற்றியடையச் செய்வது வாசகர்கள் அல்ல! சில பதிவுகளைத்தவிர்த்து பெரும்பான்மையாக பதிவர்களை சார்ந்திருக்கிறது.வாக்கு,கருத்துரைகளில் பங்கேற்பவர்கள் பதிவர்களே! இதில் பொறாமை,அரசியல் எல்லாம் பிரபலங்களை சுற்றியே இருக்கின்றன.மெயில் அனுப்பி,சாட் செய்து அரசியல் செய்வதை ஒரு சிலர்தான் விரும்புவார்கள்.
சினிமாவைத்தான் சூதாட்டம் என்பார்கள்.வலைப்பதிவுகளும் அப்படித்தான் இருக்கின்றன.எந்த பதிவு ஹிட்டாகும்,எது ஆகாது என்பது யாருக்கும் தெரியாது.நண்பர் ஒருவர் “பதிவு போட்டிருக்கிறேன் ஹிட்டாகும்”என்றார்.ஆனால் இருபது பேர் கூட படிக்கவில்லை.தவிர முப்பது வயதில் ஒருவர் பார்த்த,கேட்ட சுவையான விஷயங்களை எத்தனை பதிவுகள் எழுத முடியும்?தினம் தினம் நமக்கு ஏற்படும் அனுபவங்களை எழுதினாலும் ஒருவருடைய பார்வை ஒன்றுதான்.
அரசியல் பதிவென்றால் சீரான கொள்கை வேண்டும்.இப்போது தி.மு.க வை விமர்சித்து எழுதினால் அதிகம் படிக்கப்படும் என்று சொல்ல முடியாது.தேர்தல் நேரத்தில் அரசியல் தொடர்பான இடுகைகளே அதிகம் படிக்கப்பட்ட்து.ஒருவரது பிரபலத்தை காலமும் தீர்மானிக்கலாம்.தவிர இதில் என்ன இருக்கிறது என்ற சலிப்பும் நேரலாம்.விட்டுப்போனதை நண்பர்களும் சொல்ல்லாம்
பிரபல பதிவர்கள் ஏன் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்?
Reviewed by haru
on
November 14, 2011
Rating:
No comments