ஆணின் மணவாழ்வை குறி வைத்த பெண்.

Ads Below The Title
                               நகரின் பிரபலமான பகுதியில் நல்ல தொழில்.ஒரே பையன்.கல்லூரிப் படிப்பு வரை படித்திருந்தான்.கௌரவமான குடும்பம் என்று சொல்வார்களே அப்படி! கல்யாண வயது ஆகிவிட்ட்து என்று அப்போதுதான் அவர்களுடைய பெற்றோருக்கு தெரிய வந்த்து.அதே தெருவில் இருக்கும் உறவுப் பெண் ஒருவர் வந்து பேசினார்.அந்தப் பெண்ணை உங்கள் பையனுக்கு செய்து கொள்ளுங்கள்,இத்தனை பவுன் போடுவதாக சொல்கிறார்கள்’’
                              எடுத்த எடுப்பிலேயே அந்த வரனை நிராகரித்துவிட்டார்கள்.காதலுடன் ஓடிப்போனவரை பிரித்து வீட்டில் கொண்டு வந்து வைத்திருந்தார்கள்.அவனுடைய பெற்றோர்கள் போட்ட சத்த்த்தில் உறவுப்பெண் ஆத்திரத்தோடு கிளம்பிப் போனதோடு சரி! அப்புறம் பேச்சு வார்த்தையில்லை.இவனுக்கு பெண் தேட ஆரம்பித்தார்கள்.
                              இரண்டு மூன்று பெண்ணைப்பார்த்து இரு வீட்டார் சம்மதம் இருந்த பிறகும் பெண்வீட்டார் தரப்பில் தட்டிக் கழித்தார்கள்.இது தொடர்கதை ஆகிக் கொண்டிருந்த்து.ஜாதகத்தை தூக்கிக் கொண்டு சோதிடர்களிடம் ஓடினார்கள்.கோயில்கள்,பரிகாரம்,குளத்தில் நீராடுதல் என்று நாட்கள் கடந்த்தே தவிர கல்யாணம் ஆசை மட்டும் கனவாகவே இருந்த்து.
                               எந்தக் குறையுமில்லாத பையனுக்கு இது அசாதாரண விஷயம்.சம்மதம் தெரிவித்து வீட்டுக்கு வந்து போனவர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை.மனசுக்குப் பிடித்துப் போன நல்ல இடம்.பின்னர் புரோக்கர் வந்து சொன்னார்,’’பையனைப் பற்றி யாரோ தவறான தகவலை சொல்லியிருக்கிறார்கள்’’.உறவுக்காரப் பெண்ணின் வேலைதான் என்பது தெரிய வந்த்து.அவர் சொன்ன பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளாத்தால் இப்படி செய்கிறார் என்று விளக்கிய பிறகும் அவர்கள் பெண் கொடுக்க முன்வரவில்லை.
                              ஒரு நாள் இரண்டு குடும்பத்துக்கும் பெரிய சண்டை.தெரு முழுக்க வேடிக்கை பார்த்தார்கள்.அதற்குப்பிறகு கொஞ்ச நாளில் தெருவில் பெரும்பாலான வீடுகள் இவர்களுக்கு எதிராக மாறியது.ஓடிப்போய் உதவுதல்,இனிக்க இனிக்க பேசுதல் என்று  மற்ற வீடுகளுடன் நல்லுறவை வளர்க்க ஆரம்பித்தார் உறவுப் பெண்.லாபியிங்கில் நேர்மையானவர்களை விடவும் நேர்மையற்றவர்கள் உணர்ச்சிபூர்வமாக செயல்பட்டு வெற்றி பெற்று விடுகிறார்கள்.
                                                                          நல்லவர்கள் நாம்தான் நல்லவர்கள் ஆயிற்றே என்று தற்பெருமையில் இருக்கிறார்கள்.அவர்களுக்கு எதிரானவர்கள் அப்படி இருப்பதில்லை.வேறு தெருவுக்கு குடி போகிற நிலை.ஆனாலும் கல்யாண முயற்சி மட்டும் வெற்றி பெறவில்லை.சில நேரங்களில் இப்படிப்பட்ட சம்பவங்களை கேள்விப்படுகிறேன்.அக்கம்பக்கத்தில் விசாரித்தால் நல்ல மாதிரி சொல்வதில்லை என்பார்கள்.
                                 கல்யாண விசாரிப்புகளை பொருத்தவரை பத்து பேர் நல்லவன் என்று சொன்னாலும்,ஒருவர் வேறு மாதிரி சொன்னால் யாருக்கும் மனம் வருவதில்லை.சிலர் துப்பறியும் நிறுவன்ங்களை நாடுகிறார்கள்.நல்லவர்களைப் போல பொல்லாதவர்கள் அதிகமாகி விட்ட்தால் யாரைத்தான் நம்புவது? சிலருடைய வாழ்க்கை இப்படியும் ஆகிவிடுகிறது.

 எதிலும் வெற்றிபெற நல்லவராக இருப்பது மட்டுமல்ல வேறு சில விஷயங்களும் தேவைப்படுகிறது.பூக்கடைக்கும் விளம்பரம் தேவை என்று சொல்கிறார்களே அப்படி!
ஆணின் மணவாழ்வை குறி வைத்த பெண். ஆணின் மணவாழ்வை குறி வைத்த பெண். Reviewed by haru on November 11, 2011 Rating: 5

No comments