மம்பட்டியான் நினைவுகள்.
சிறுவயதில் ம்ம்பட்டியான் கதை கேட்ட நினைவு இன்னும் இருக்கிறது.பெரியப்பா வீட்டில் இருந்தேன்.மலையோர கிராமத்திலிருந்து ஒரு பாட்டி வந்திருந்தார்.அண்ணன்களுக்கு(பெரியப்பா மகன்கள்) அம்மாவைப்பெற்ற பாட்டி.ஒரு கிளியை கூண்டில் அடைத்து எடுத்து வந்திருந்தார்.குச்சி செருகியிருந்த்து.அவ்வளவு உறுதியான கூண்டு இல்லை.
மனம் முழுக்க கிளியிடமே இருக்கிறது.அதன் அழகை பார்க்க பார்க்க சலிக்கவில்லை.”கிளி பேசுமா? என்று கேட்டேன்.”சொல்லிக்கொடுத்தால் பேசும்.இன்னும் பழகவில்லை.நேராக காட்டில் இருந்து கொண்டு வருகிறேன்.”எனக்கு இப்படி ஒரு பாட்டி இல்லாயே என்று கவலையாக போய்விட்ட்து.அன்று இரவு அங்கேயே தங்கிவிட்டேன்.
பாட்டி ம்ம்பட்டியான் கதை சொல்ல ஆரம்பித்தார்.உணர்ச்சிப்பெருக்கோடு சொல்லிக் கொண்டு வந்தார்.மலையூருக்கும் அவருடைய கிராமத்திற்கும் சில கிலோமீட்டர் தூரம் இருக்கும் என்று நினைக்கிறேன்.அவர் மிகவும் மரியாதையுடன் குறிப்பிட்ட்தாக நினைவு.கிட்ட்த்தட்ட கதாநாயகனாக வர்ணித்தார்.கேடக சந்தோஷமாக இருந்த்து.
சந்தைக்கு போயிருந்தபோது ம்ம்பட்டியான் பற்றிய புத்தகம் பார்த்தேன்.கிராமத்தில் இருப்பவர்களுக்கு வாராவாரம் கூடும் சந்தைதான் சூப்பர் மார்க்கெட்.இப்போது சந்தைகள் களையிழந்து விட்டன.சினிமா பாடல்கள்,மாரியம்மன் தாலாட்டு,ம்ம்பட்டியான் கதை போன்ற புத்தகங்களை வைத்து விற்றுக்கொண்டிருப்பார்கள்.
மேற்கண்ட பின்னணியாகத்தான் இருக்கவேண்டும்.தியாகராஜனின் மலையூர் ம்ம்பட்டியான் பட்த்தை நான் பார்க்கவில்லை.1983 ல் நான் சின்னப்பையன்.யார் கூட்டிப்போவார்கள்?பிரசாந்த் நடித்து வெளியாகியுள்ள பட்த்தை பார்க்கலாம் என்று தோன்றிவிட்ட்து.நாற்பது ரூபாய்தானே போனால் போகிறது.இருக்கைகள் கொஞ்ச நேரத்திலேயே நிரம்பி விட்ட்து.தியேட்டர் முழுக்க நிரம்பியதைப் பார்த்து பலகாலம் ஆகிவிட்ட்து.
திருவிழா ஒன்றில் பெற்றோரைக் கொன்றவர்களை பழிவாங்கி விட்டு காட்டுக்குள் மறைகிறார் ம்ம்பட்டியான்.அதே வீரப்பன் காடுதான்.போலீஸ் தேடுகிறது.இருப்பவர்களிடம் பறித்து இல்லாதவர்களுக்கு உதவி செய்கிறார்.கிராமத்து மக்கள் மிகவும் மரியாதை வைத்திருக்கிறார்கள்.காவல்துறைக்கு அடிக்கடி டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பிக்கிறார்.போலீஸ் ம்ம்பட்டியான் தலைக்கு வைத்த விலை நல்லவனை கெட்டவனாக்க படம் முடிகிறது.
மலையோர கிராமங்கள்,கல்வீடு,அருவி,காடு என்று பார்க்க சந்தோஷமான லொகேஷன்.வடிவேல் வெகு நாட்களுக்குப் பிறகு வெள்ளித்திரையில்! தனது வழக்கமான உடல் மொழியுடன் அதேவடிவேல்.திரைப்பட்த்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.பிரகாஷ்ராஜ் போலீஸ் அதிகாரி பாத்திரத்தில் விரைப்பாக இருக்கிறார்.அவருக்கு யாராவது நடிப்பு சொல்லித்தரவேண்டுமா என்ன?
ஒரு காலத்தில் தமிழ்சினிமாவுக்கு ஒரு ஃபார்முலா இருந்த்து. பட்த்தில் அவசியம் ஒரு கவர்ச்சி நடிகை இடம்பெற வேண்டும்.முமைத்கான் படம் முழுக்க தாராள கவர்ச்சியாம்.!?நடனமாடுபவர் என்றால் மட்டும் படம் முழுக்க அரைகுறை உடையுடனே இருக்கவேண்டுமா என்ன? இதனால்தான் படம் ஓடுகிறது என்று எண்ணி தொடராமல் இருந்தால் நல்லது.
கதாநாயகி கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை சிறப்பாகவே செய்துவிட்டார்.பழைய பாடல்கள் இப்போதும் கேட்க அவ்வளவு சுகம்.பட்த்திற்கு நல்ல வசூல் நிச்சயம் என்றுதான் தோன்றுகிறது.மற்றபடி தொழில்நுட்பம் எனக்கு அவ்வளவாக தெரியாது.நான் சினிமா விமர்சகனும் அல்ல!
மம்பட்டியான் நினைவுகள்.
Reviewed by haru
on
December 19, 2011
Rating:
No comments