எலுமிச்சைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
புத்தாண்டு இன்னும் சில பதிவுகளுக்குள் வந்துவிடும்.முக்கியமானவர்களை சந்திக்க போக வேண்டுமானால் வெறும் கையோடு போக முடியாது.நமக்கு எப்போதும் எலுமிச்சைதான் வசதி.கல்யாணம்,கோயில் என்று பயணம் கிளம்புகிறார்கள். சக்கரத்தின் அடியில் எலுமிச்சை வைக்கிறார்கள்.அருள்வாக்கு இல்லாத பகுதிகள் குறைவு.பெரும்பாலும் எலுமிச்சம்பழத்தை மந்தரித்து தருகிறார்கள்.
எலுமிச்சைக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? அப்படி என்ன இருக்கிறது அந்த சிறிய பழத்தில்? இத்தனைக்கும் புளிப்பு.சுவைக்கு காரணம் அதில் உள்ள அமிலம்.அஸ்கார்பிக் அமிலம் என்று சொல்வார்கள்.உயிர்ச்சத்து(vitamin) சி குறிப்பிட்த்தக்க அளவு இருக்கிறது.வாசனைப்பொருளாக உணவில் சேர்க்கும் பொருளாக மதிப்பு பெற்று விளங்குகிறது.
இந்தியாவின் பெருவாரியான மக்களுக்கும் நுண் ஊட்டச்சத்துக் குறைபாடு ஒரு பிரச்சினை.அதிலும் சி வைட்டமின் உடலில் சேர்வது மிக குறைவு.இச்சத்து அதிகம் உள்ள சிட்ரஸ் வகை பழங்களில் ஏழைகள் அதிகம் நுகர வாய்ப்புள்ளது எலுமிச்சை மட்டுமே! மற்றவை எல்லா கிராமங்களிலும் கிடைக்கும் பழங்கள் அல்ல!
குளிர்பானம் என்றால் கூட ஏழைகளுக்கு எலுமிச்சைதான் தேர்வு.மற்றவை விலை அதிகம்.வெயிலுக்கு வீட்டில் உடனடியாக தயாரிக்க முடியும் குளிர்பானமும் இதுதான்.எலுமிச்சை சாதம் எளிய தயாரிப்பு.ஊறுகாய் பலருக்கு பிடித்தமான பொருள்.இப்படி குறைந்த விலையில் முழு ஆரோக்கியம் எலுமிச்சை ஒன்றால்தான் சாத்தியம்.
நாம் வெயில் காலத்தில்தான் எலுமிச்சையை நாடுவோம்.குளிர்ச்சி என்பதால் நல்லது என்பது நம் எண்ணம்.ஆனால் குளிர்காலத்தில் பயன்படுத்துவது அதைவிடவும் நல்லது.இப்பருவத்தில் தோல்நோய்கள் அதிகம்.தோலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அதிக அளவு சி வைட்டமின் பரிந்துரைக்கப்படுகிறது.தவிர இப்போது ஒரு லெமன் ஜூஸ் குடித்தால் பழத்தின் முழுப்பயன் கிடைக்க வாய்ப்புண்டு.
வெயில் காலத்தில் கடைகளில் குடிக்கும் எலுமிச்சை பானத்திலும்,சாதம் போன்றவற்றிலும் வெறும் வாசனை மட்டுமே இருக்கும்.விலை காரணமாகவும் அதிக நுகர்வு காரணமாகவும் கடை வைத்திருப்பவர்கள் அப்ப்டித்தான்! குளிர் காலத்தில் நிஜமாகவே லெமன் இருக்க வாய்ப்புண்டு.பலனும் அதிகமாக இருக்கும்.எனக்கு ஜலதோஷம் வந்து விடும் என்பவர்கள் தவிர்த்துவிடலாம்.
உண்மையில் எலுமிச்சை ஜலதோஷத்தை தடுக்கவே செய்யும்.போதுமான அளவு சி வைட்டமின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மூலமாக இந்நோய்களை விரட்டும்.எனவே குளிர் காலத்திற்கும் ஏற்ற முக்கியமான கனி எலுமிச்சை.ஏதோ ஒரு வித்த்தில் உணவில் சேர்க்கலாம்.
”எலுமிச்சம்பழத்தை தலைக்கு தேய்த்து குளி” என்று கிண்டலாக சொல்வார்கள்.பித்துப் பிடித்தவன் என்று கலாய்ப்பதற்காக நண்பர்கள் சொல்வது.தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகு போய் சுத்தமாக ஆகி விடும்.ஆனால் உண்மையில் பித்துப் பிடித்தவன் போல இருப்பவனை உற்சாகமாக்கு சக்தி எலுமிச்சைக்கு உண்டு.
இப்பழத்தில் உள்ள வைட்டமின் இரும்புச் சத்து கிரகிக்க உதவுகிறது.போதுமான அளவு இரும்புச்சத்து சோர்வின்றி செயல்பட அவசியமான தேவை.மலச்சிக்கல்,சில வயிற்றுக்கோளாறுகளுக்கும் அருமருந்து.ஏழைகளுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் ஏற்ற கனி இது.உள்ளே விஷயம் இல்லாமலா இந்தளவு முக்கியத்துவம் பெற்றிருக்கும்?
எலுமிச்சைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
Reviewed by haru
on
December 20, 2011
Rating:
No comments