பப்பாளி குளிர்ச்சியா? சூடா?
பப்பாளிப்பழம் சூடு என்று வழக்கில் இருக்கிறது.பல காலமாக இருந்து வரும் நம்பிக்கை.கர்ப்பிணிகள் சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும் என்று சொல்வார்கள்.அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லும் மருத்துவர்களும் உண்டு.
அதிக புரதம் உள்ள உணவுகளுடன் பப்பாளி சாப்பிடுமாறு உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.சரியான செரிமானத்தை உண்டாக்கி புரதத்தை உடலில் சேர்க்கிறது.பருப்பு வகைகள் ,அசைவம் போன்றவை புரதம் அதிகம் உள்ளவை.கலப்படம் செய்பவர்கள் பப்பாளி விதையை மிளகுடன் சேர்க்கிறார்கள்.நேர்மையற்ற செயல்தானே தவிர உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்காது.பப்பாளி இன்று பேஷனாகி வருவதை பல இடங்களில் பார்க்கிறேன்.மதிய உணவுடன் பழத்துண்டுகள் எடுத்து வருகிறார்கள்.குழந்தைகளுக்கும் கொடுத்தனுப்பலாம்.ஆனால் அதிகம் சேர்க்கக் கூடாது.
உணவுப்பொருள் சார்ந்து தாவரங்கள் சார்ந்து எத்தனையோ நம்பிக்கைகள் இருக்கின்றன்.அத்தனையும் ஆய்வு செய்து சரி தவறு என்று நிரூபிக்கவில்லை.எனவே கர்ப்பிணிகள் தவிர்க்கலாம் என்பது எனது கருத்து.பப்பாளி முக அழகுக்காக பல இடங்களில் பயன்படுத்துகிறார்கள்.நானும் பயன்படுத்தி பார்த்திருக்கிறேன்.
நன்கு பழுத்த பப்பாளியை பிசைத்து முகத்தில் பூசி கொஞ்ச நேரம் விட்டு முகம் கழுவினேன்.அத்தனை சுத்தம்.வேறெதுவும் தேவைப்படாது.செய்து பார்த்தால் தெரியும்.பள்ளி விட்டு வந்தால் கிராமத்தில் பப்பாளி போன்றவைதான் உடனே சாப்பிட கிடைக்கும்.
பயிருக்கு நீர் செல்லும் கால்வாய் பக்கத்தில் வரிசையாக நிற்கும்.மரம் ஏறி பிடுங்க முடியாது.நாமும் மரமும் சேர்ந்து விழவேண்டி இருக்கும்.உறுதியான மாறாமல்! ஒரு நீளமான குச்சியை எடுத்து அதிக நேரம் முயற்சி செய்து பறிக்கவேண்டும்.நன்கு பழுத்திருந்தால் எளிது.
மரங்கள் இருந்தால் கிராமத்து வீட்டு சமையலில் பரங்கிக் காய் பொரியல் அடிக்கடி இருக்கும்.வயிற்றில் ஏற்படும் கோளாறுகளுக்கு பப்பாளியை சாப்பிட சொல்வார்கள்.ஆனால் பேதி இருந்தால் சாப்பிடக் கூடாது என்பார்கள்.
பச்சை நிறத்தில் வாந்தி எடுத்தால் பித்தம் என்பார்கள்.இதற்கும் இப்பழத்தை சாப்பிடச் சொல்பவர்கள் உண்டு.
ஏ வைட்டமின் நிறைய உள்ளது.சி,பி வைட்டமின்களும் உண்டு.கால்சியம் ,பொட்டாசியம் போன்ற தாதுக்களும் இருக்கின்றன்.
ஏ வைட்டமின் நிறைய உள்ளது.சி,பி வைட்டமின்களும் உண்டு.கால்சியம் ,பொட்டாசியம் போன்ற தாதுக்களும் இருக்கின்றன்.
அதிக புரதம் உள்ள உணவுகளுடன் பப்பாளி சாப்பிடுமாறு உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.சரியான செரிமானத்தை உண்டாக்கி புரதத்தை உடலில் சேர்க்கிறது.பருப்பு வகைகள் ,அசைவம் போன்றவை புரதம் அதிகம் உள்ளவை.கலப்படம் செய்பவர்கள் பப்பாளி விதையை மிளகுடன் சேர்க்கிறார்கள்.நேர்மையற்ற செயல்தானே தவிர உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்காது.பப்பாளி இன்று பேஷனாகி வருவதை பல இடங்களில் பார்க்கிறேன்.மதிய உணவுடன் பழத்துண்டுகள் எடுத்து வருகிறார்கள்.குழந்தைகளுக்கும் கொடுத்தனுப்பலாம்.ஆனால் அதிகம் சேர்க்கக் கூடாது.
பப்பாளி குளிர்ச்சியா? சூடா?
Reviewed by haru
on
December 05, 2011
Rating:
No comments