மாத்திரைகளும் மனிதர்களும்
பலசரக்கு கடைகளில்,காய்கறி கடைகளில் நிற்கும் மக்கள் கூட்ட்த்தை விட அலை மோதுகிறார்கள்.சமீப காலமாக மருந்துக்கடைகள் நிரம்பி வழிகின்றன.முன்பெல்லாம் மருத்துவமனை,மருத்துவர் அருகில் இருந்தால்தான் ஃபார்மஸி விற்பனை இருக்கும் என்று நம்பினார்கள்.இப்போது அப்படியில்லை.
தானாகவே மாத்திரை பெயர் சொல்லி வாங்குபவர்களும்,தொந்தரவை சொல்லி வாங்கிக் கொள்பவர்களும் அதிகரித்து விட்டார்கள்.இது தொடர்பாக எனது முந்தைய பதிவுகள் மாத்திரைகள் சாப்பிடுவதுண்டா? உஷார் மற்றும் உடல்நலம்-உயிரைக்குடிக்கும் பழக்கங்கள். அலோபதி கடைகள் என்றில்லாமல் சித்தா,ஆயுர்வேத மருந்துகளும் சக்கைப்போடு போடுகின்றன.
எனக்கு வேறொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.உறவினர் ஒருவருக்கு சரியாக தூக்கம் வருவதில்லை என்று மருத்துவரிடம் போனார்.அவரும் மாத்திரைகள் கொடுத்தார்.அப்புறம் மருத்துவரிடம் போகாமலே கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்திருக்கிறார்.ஒரு கட்ட்த்தில் மாத்திரை இல்லாவிட்டால் தூக்கமில்லை என்ற நிலை வந்து விட்ட்து.
வீட்டில் இருப்பவர்கள் மிகத் தாமதமாகவே இதை அறிந்திருக்கிறார்கள்.மீண்டும் மருத்துவரிடம் அழைத்துப்போய் விஷயத்தைச்சொன்னால் பழைய மருந்து சீட்டு அல்லது மாத்திரை அட்டை ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார்.பரிந்துரை சீட்டு கிடைக்காவிட்டாலும் மாத்திரை அட்டையை கொண்டுபோய் காட்டினார்கள்.
மாத்திரையை பார்த்தவுடன் மருத்துவருக்கு புன்னகை.அது தூக்கத்தை வரவழைக்கும் மாத்திரை அல்ல! ஆனால் வலி நிவாரணி.உடலில் ஏதோ வலி இருப்பதாக சொன்னதால் இது தூக்கத்திற்கு என்று காட்டி அப்போதைக்கு கொடுத்துவிட்டார்.வலி நிவாரணியை அதிகம் பயன்படுத்துவது ஆபத்தானது.சிறுநீரகம் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்.
இப்படி இன்று நிறைய பேர் இருக்கலாம் என்று தோன்றுகிறது.தூக்கத்திற்கு என்றில்லாமல் உடல்வலி,வயிற்றில் அமிலம் சுரத்தல் என்று மாத்திரை போட்டால்தான் ஆகிறது என்று ஆகிவிட முடியும்.மாத்திரைகளுக்கு அடிமையான நிலைதான் இது.சில உடல் நலக்குறைவுகளுக்கு தொடர்ந்து மாத்திரை உட்கொள்பவர்கள் மனதளவில் இப்படி ஆகிவிடுவதுண்டு.
இம்மாதிரியான நிகழ்வுகளில் மாத்திரைகள்தான் மீண்டும் பரிந்துரைப்பார்கள்.படிக்காத ஆளாக இருந்தால் வைட்டமின் மாத்திரைகளை கொடுப்பார்கள்.விஷயம் தெரிந்த படித்தவராக இருந்தால் அதற்கும் மாத்திரை இருக்கிறது.சிலரை ஏமாற்ற முடியாது.அவர்களுக்கு ஆலோசனைதான் தீர்வு.
மருந்துக்கடைகளில் அலைமோதும் கூட்ட்த்தில் மேலே சொன்னவாறு இருக்கவும் வாய்ப்புள்ளது.நம் குடும்பத்திலோ,தெரிந்தவர்களோ யாரேனும் இருந்தால் எடுத்துச் சொல்லுங்கள்.ஒரே மாத்திரையை மீண்டும் மீண்டும் நாமாகவே வாங்கிப் பயன்படுத்துவது பிரச்சினையை வளர்க்கும்.
மாத்திரைகளும் மனிதர்களும்
Reviewed by haru
on
December 07, 2011
Rating:
No comments