வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை முன்வைத்து...
நகைச்சுவை என்றால் யாருக்குத்தான் பிடிக்காமல் போய்விடும்? இன்றைய சூழலில் அது மருந்துபோல இறுக்கத்தைக் குறைக்க உதவுகிறது.தமிழ்சினிமாவிற்கு இது சிரிப்புயுகம்!.அரங்கில் நின்றுகொண்டு படம் பார்க்கும் ரசிகர்களை நீண்டகாலத்திற்குப்பிறகு பார்த்தேன்.சில இடங்களில் விசில் சத்தம் காதைப்பிளக்கிறது.நண்பர் சொன்னார், காதல் தோல்வி பற்றி பாட்டு வந்தாலே இப்படித்தான்! எந்தப்படமாக இருந்தாலும் விசில் பறக்கும்.
காதலில் தோற்றுப்போன நிலையில் பாடும் பாடலுக்கு ஏன் இத்தனை சத்தம்? நண்பருக்கு நான் அப்போது பதிலை சொல்லவில்லை.பெண்ணை குறை சொல்வது அவர்களுக்கு பிடித்திருக்கிறது.தனது பிம்பமாக பார்க்கிறார்கள்.ஏராளமான இளைஞர்கள் காதல் தோல்வி அடைந்தவர்களா? ஏமாற்றப்பட்டவர்களா?
ஒருதலைக்காதலில் தோல்வி அடைந்து தற்கொலைக்கு முயற்சி செய்த ஒரு பெண்ணை சந்தித்தேன்.கிட்டத்தட்ட உறவுக்கார பையன்.பையனுக்கு வேறு காதலி இருப்பது இப்பெண்ணுக்குத் தெரியாது. அவரும் என்னைக்காதலித்தார் ஆனால் சொல்லவில்லை.எனக்குத்தெரியாதா? என்று கேட்டார்.என் வீட்டைத்தாண்டி வண்டியில் போகும்போது ஹாரன் அடிக்காமல் போகமாட்டார் என்றார்.பெண்ணின் வீடு தெருமுனையில் அமைந்திருக்கிறது. ஹாரன் அடிக்காமல் பெரும்பாலானவர்கள் கடந்து செல்ல வாய்ப்பில்லை.
இளமையில் பலருக்கும் இப்படித்தான் நேர்ந்துவிடுகிறது.பார்ப்பதையும்,பேசுவதையும் காதலாக நினைத்துக்கொள்கிறார்கள்.அப்புறம் திரையரங்கில் விசிலடிப்பார்கள்.பெண்களை குறை சொல்லும்போது கைதட்டி உற்சாகம் கொள்வார்கள்.நம்மை ஒருவருக்குப் பிடிக்கவில்லை என்பதை யாராலும் தாங்கிக்கொள்ளவே முடியாது.
உடலுக்கு நோய் எதிர்ப்பு முறை இருப்பது உங்களுக்குத்தெரியும்.பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணியிரிகள்,விஷம் போன்றவை உடலுக்குள் நுழையும்போது உடல் புரதங்களை வெளியிட்டு தன்னைக்காத்துக்கொள்கிறது.உடலைப்போலவே மனசுக்கும் தன்னை தற்காத்துக்கொள்ளும் திறன் உண்டு.துயரம் விளைவிக்கும் எண்ணங்களை மாற்ற நனவிலிமனம் அதற்கான எண்ணங்களை உருவாக்குகிறது.
புற்றுநோய், எச்.ஐ.வி போன்ற பரிசோதனை முடிவுகளை சொன்னவுடன் சிலர் மறுப்பார்கள்.உண்மையான தகவலாக இருந்தாலும் துயரம் தருமென்றால் அப்படியெல்லாம் இருக்காது என்று சொல்வார்கள்.அவருக்குப்பிடிக்கவில்லை என்று பெண்ணோ,பெண்ணுக்கு என்னை பிடிக்கவில்லை என்று ஆணோ ஒருபோதும் சொல்லமாட்டார்கள்.வேறு ஏதேனும் காரணத்தை அவர்கள் சொல்லக்கேட்டிருக்கலாம்.
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை முன்வைத்து...
Reviewed by haru
on
September 09, 2013
Rating:
Reviewed by haru
on
September 09, 2013
Rating:





No comments