Ads Below The Title

தூக்கம் வராவிட்டால் படுக்கையில் புரள்வது சரியா?


சோர்ந்த முகத்துடன் வருகிறார் சக ஊழியர்.எளிதில் யாராலும் அவர் தூங்கவில்லை என்பதை கண்டுபிடித்துவிடலாம்.என்னவென்று விசாரித்தேன்.இரவு முழுக்க புரண்டு புரண்டு படுக்கிறேன்.தூக்கம் வரவில்லை.அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுவதும்,நேரத்தை பார்ப்பதுமாக இருந்தேன்.முடியவில்லை.தூக்கமின்மை பிரச்சினைகள்-சில குறிப்புகள் என்ற இடுகையை ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன்.படிக்காதவர்கள் படிக்கவும். http://counselforany.blogspot.com/2011/04/blog-post_4681.html
                                 பத்து மணிக்கு விளக்கை அணைத்து விட்டு வழக்கம்போல படுக்கைக்குப் போய்விட்டார்.மனைவியும்,குழந்தையும் உறவினர் வீட்டுக்குப் போய்விட்டார்கள்.வீட்டில் இவர் மட்டும் தனியே! அவருக்கு இதற்கு முன்பு இப்படிப்பட்ட பிரச்சினைகள் நேர்ந்த்தில்லை.சிலர் தனிமையில் வெறுமையை உணர்வதும்,குழம்புவதும் சகஜம்.
                                  தலைப்புக்கு வருவோம்.தூக்கம் வராதபோது படுக்கையில் விழித்துக்கொண்டு,புரண்டு படுத்துக்கொண்டு இருக்க வேண்டுமா? இது தவறானது என்பதே நிபுணர்களின் கருத்து.யோகாசனம் பழக்கமிருந்தால் சவாசன நிலையில் இருந்து பார்க்கலாம்.தூக்கம் வராவிட்டால் படுக்கையை விட்டு எழுந்து விடுவதே மேலானது.
                                  தூக்கம் கண்ணை சுழட்டும் வரை பிடித்தமான எதையாவது செய்து கொண்டிருப்பதே நல்லது.தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.ஆனால் நல்ல பாடல்களையோ,நகைச்சுவை காட்சிகளையோ பார்ப்பது மனம் ஓரளவு சமநிலை பெற வழிவகுக்கும்.
                                 மனதுக்குப் பிடித்த அதிக சிந்தனையைக் கோராத புத்தகங்களையும் படிக்கலாம்.குழப்பமான எண்ணங்களிலிருந்து மனம் திசை திரும்ப இதுவும் நல்ல வழி.அடுத்த்தாக இசை கேட்பது.நல்ல இசையைப்போல மனதுக்கு இதம் தரும் விஷயம் வேறெதுவுமில்லை.தூக்கம் வரும்வரை இவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்யலாம்.
                                  புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள சிலர் தூக்கம் வராதபோது அடிக்கடி புகைபிடிப்பதில் ஈடுபடுவதுண்டு.இது இன்னும் நிலையை மோசமாக்கும்.சில தின்ங்கள் தொடர்ந்து தூக்கமில்லாத நிலையில் இருப்பவர்கள் மதுவை நாடுவது அடிமையாக்கும் வரை கொண்டு போய்விட்டுவிடும்.அதற்கு முன்பு நண்பர்களுடன் சேர்ந்தால்மட்டும் குடிப்பவர்கள்,தூக்கம் வரவில்லையே குடித்துப்பார்க்கலாம் என்று இறங்குவார்கள்.ஆல்கஹால் தூக்கத்தைக் கெடுக்கும்.
                                  மேலே தந்துள்ள முந்தைய பதிவில் குறிப்பிட்ட்தைப்போல தூக்கமின்மை என்பது மனம் பாதிக்கப்பட்டுள்ளதன் அறிகுறிதான்.ஏதாவது பிரச்சினையால் மனம் சம நிலை இழக்கும்போது இப்படி ஏற்படலாம்.பிரச்சினை தீர்ந்தவுடன் தானாகவே சரியாகிவிடும்.தொடர்ந்து இருந்தால் தயக்கமின்றி மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
                                  படுக்கையில் புரண்டு கொண்டே இருக்கும்போது,அதுவும் தனிமையில் இருந்தால் தேவையில்லாத எண்ணங்கள் குழப்பும்.தோன்றும் எண்ணங்களுக்கு ஏற்ப மனதிலும்,உடலிலும் மாற்றங்கள் உருவாகும்.அடிக்கடி சிறுநீர் கழிக்கப்போவது அதனால்தான்.சில எண்ணங்கள் அவரிடம் பதட்ட்த்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
                                  படுக்கையை விட்டு எழுந்து மேலே சொன்னவாறு ஏதேனும் செய்ய ஆரம்பித்தால் தேவையில்லாத எண்ணங்களைத்தடுத்து விடலாம்.விரைவாக உங்களுக்கு நல்ல தூக்கம் வரவும் வாய்ப்புண்டு.எட்டு மணி நேர தூக்கம் அவசியம் என்பதை உணருங்கள்.

தூக்கம் வராவிட்டால் படுக்கையில் புரள்வது சரியா? தூக்கம் வராவிட்டால் படுக்கையில் புரள்வது சரியா? Reviewed by haru on October 07, 2011 Rating: 5

No comments

Ads Inter Below The Post
Image Link [https://lh3.googleusercontent.com/-wlvSkBWGUW0/AAAAAAAAAAI/AAAAAAAAAxU/6FpWSjn-h2o/s120-c/photo.jpg] Author Name [Sora Templates] Author Description [Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard] Facebook Username [#] Twitter Username [#] GPlus Username [#] Pinterest Username [#] Instagram Username [#]