மருத்துவமனைக்குச் செல்வீர்களா?
உடல் நலம் இல்லாவிட்டால் வேறு என்ன செய்ய முடியும்.வசதி இருந்தால் தனியார் மருத்துவமனை,வசதி இல்லாவிட்டால் அரசாங்க ஆஸ்பத்திரி.எப்படியும் மருத்துவரிடம் போய்த்தான் ஆக வேண்டும்.சுரண்டலாக இருந்தாலும் உட்பட்டு மாத்திரை மருந்தை விழுங்கியாக வேண்டும்.எனக்கு தெரிந்த மருத்துவர் ஒருவரின் அனுபவம் இது.
புதியதாக வேலைக்கு அரசு மருத்துவராக வேலைக்குச் சேர்ந்தார்.திருவண்ணாமலை மாவட்டம்தான் கிடைத்த்து.இரண்டாவது நாளில் இருபது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்திருக்கிறார்.அந்த பெண் பேசவில்லை.அவருடைய அம்மா,சலிப்பு என்றிருக்கிறார்.வட்டார வழக்கு என்று சொல்வோமே அப்படி! சலிப்பு என்றால் அங்கே சளி பிடித்திருக்கிறது,சில இடங்களில் ஜலதோஷம் என்று சொல்வார்கள்.
அவர்கள் கொடுத்த சீட்டை பார்த்தால் பல முறை மருத்துவமனை வந்து சென்றிருப்பது தெரிந்த்து.” இதற்கு முன்பெல்லாம் எதற்காக வந்தீர்கள்”?என்று கேட்டால் அதற்கு பதில் ”சலிப்பு!” என்றிருக்கிறார்கள்.அவர்கள் சொலவதை வைத்து பார்த்தால் ஆறு மாதமாக ஜலதோஷம்.மருத்துவர் ஆச்சர்யப்பட்டு ”இருமல் இருக்கிறதா?” என்று கேட்க அதற்கு பதில் ”ஆமாம்”.மாலையில் காய்ச்சல் வருகிறதா? என்று கேட்டால் ”ஆமாம்”.எடை குறைந்து விட்ட்தா? என்று கேட்டால்” ஆமாம்”
நம்ம மருத்துவருக்கு புரிந்து போய்விட்ட்து.அவர்களை விசாரித்த வரையில் அவர்களுடைய பிரச்சினை ஜலதோஷம் அல்ல! இருமல்!.அதைச் சொல்லாமல் சலிப்பு என்று சொல்கிறார்கள்.சளி பரிசோதனை செய்ய அனுப்பி வைத்து விட்டார்.அவர் நினைத்த்து சரியாகப் போய்விட்ட்து.பரிசோதனை முடிவில் அப்பெண்ணுக்கு கடுமையான காசநோய் இருப்பது உறுதி செய்யப்பட்ட்து.கவனிக்காமல் விட்டிருந்தால் மரணம் கூட ஏற்பட்டிருக்கலாம்.இந்தியாவில் காசநோயால் மரணமடைபவர்கள் அதிகம்.
மிக எளிமையாகவே இருக்கிறது.நாம் தவறும் இடங்களில் இது முக்கியமானது.நமது உடல் நலத்தில் ஏற்பட்டுள்ள தொந்தரவுகளை நாம் சரியான வார்த்தையில் சொல்வதில்லை.காய்ச்சல்,உடல் வலி,பசியின்மை என்று மூன்று கோளாறுகள் இருந்தால் பசி எடுப்பதில்லை என்று நாம் மருத்துவரிடம் சொல்வதில்லை.இது ஒரு உதாரணம்தான்.
பொதுவாக உடல்நலக்குறைவின்போது பல அறிகுறிகள் இருக்கும்.முழுமையாக சொல்லாமல் நம்மை அதிகம் பாதிப்படைய செய்திருக்கும் ஒரு அறிகுறியை மட்டும் சொல்கிறோம்.மேற்கண்ட நிகழ்வில் கவனித்தால் தெரியும்.மாலையில் காய்ச்சல் வருவதை சொல்லவில்லை.சளி பிடித்தால் சகஜம் என்று நினைத்திருக்கலாம்.
பல மருத்துவர்களுக்கு இன்று பொறுமையாக கேட்க நேரம் இல்லை.தவிர அவர்களுக்கு என்ன அக்கறை? நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.இன்னொன்று வட்டார மொழி.வேறு மாவட்ட்த்தை சேர்ந்தவர்களாக இருந்தால் பழகும் வரை சில வார்த்தைகள் புரியாமல்கூட இருக்கலாம்.தெளிவாக விளக்க வேண்டும்.
பெண்ணின் விஷயத்தில் பழைய சீட்டை எடுத்துச் சென்றது புத்திசாலித்தனம். நோய் அறிவதில் முக்கிய பங்கு அந்த சீட்டுக்கும் இருக்கிறது.வேறுவேறு நலக்குறைவுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் மருத்துவர்,ரத்த ஆய்வு,மருந்துக் கடையில் கொடுத்த அத்தனை காகிதங்களையும் எடுத்துச் செல்லவேண்டும்.சில முக்கியமானவற்றை அதில் குறித்திருப்பார்கள்.குடும்ப மருத்துவர் என்று ஒருவர் இருப்பது நல்லது.
மருத்துவமனைக்குச் செல்வீர்களா?
Reviewed by haru
on
November 09, 2011
Rating:
No comments